கம்பராமாயணம் 6566 · யுத்த 5.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மேல் உகத் தொகுதியால் - கடந்துபோன பல யுகங்களால்; முதிர்ந்த மெய் எலாம் - முதுமையடைந்த தன் உடலெல்லாம்; தோல் உகுத்தால் என - தோலை உரித்தது போல; அரவத் தொல்கடல் - பெரிய ஒலியையுடைய பழைமை வாய்ந்த கடல்; வாலுகத்தால் இடை பரந்த வைப்பெலாம் - மணல் குன்றுகளால் இடையே பரந்த இடமெல்லாம்; பால் உகுத்தால் என - பாலைச் சொரிந்தது போல்; நிலவு பாய்ந்தது - நிலவு பாய்ந்து பரவியது.
முதிர்ந்த - முதிர்ச்சியுற்ற. அரவம் - ஓசை. தொல்கடல் - பழமையான கடல். வாலுகம் - மணற்குன்று. வைப்பு - இடம். உகுத்தல் - சொரிதல். உகத்தொகுதி - பலயுகங்களின் தொகுதி. விசும்பு தோல் உரித்தற்கு காரணம் கூறுவார் 'உகத் தொகுதியால் முதிர்ந்த மெய்” என்றார். மேலே இருந்து நிலவுதரையில் பாய்ந்தமைக்கு விசும்பு தோலுரித்ததையும் கரையெங்கும் நிலவொளி பரவியிருப்பதற்கு கடல் வாலுகத்தால் பாலைப் பொழிந்திருப்பதையும் உருவகம் செய்தார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As if the sky, its whole body grown old through the long ages above,
- had shed its skin, and as if the ancient roaring sea
- had poured out milk over all the places spread between its sand-dunes,
- the moonlight flooded down.
What the poem says
Two images for the moonlight. Pouring down from above, it is like the sky, aged by countless eons, sloughing off its old skin as a snake does.
Spreading white over the dunes along the shore, it is like milk poured out across the sand by the ancient, booming sea.