கம்பராமாயணம் 6565 · யுத்த 5.7

Section யுத்த காண்டம் / 5. இலங்கை வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1புடைக்க வன் திரை எடுத்து ஆர்க்கும் போர்க் கடல்
உடைக்கருந் தனிநிறம் ஒளித்துக் கொண்டவன்
அடைக்க வந்தான் எனை அரியின் தானையால்
கிடைக்க வந்தான்'எனக் கிளர்ந்தது ஒத்ததே.

பொருள் · Meaning in Tamil

புடைக்கை வன்திரை எடுத்து - பக்கங்களிலுள்ள கைகளாகிய வலிய அலைகளை வீசி; ஆர்க்கும் போர்க் கடல் - ஆரவாரம் செய்து போர்புரிய வரும் கடலானது; உடைக் கரும் தனிநிறம் - என்னுடைய கருமையான ஒப்பற்ற நிறத்தினை; ஒளித்துக் கொண்டவன் - தான் கவர்ந்து வைத்துக் கொண்டவனாகிய இராமன்; அரியின் தானையால் - வானரங்களின் படையைத் துணைகளாகக் கொண்டு; எனை அடைக்க வந்தான் - என்னைத் தடுத்து அணைகட்ட வந்தான்; கிடைக்க வந்தான் - எனது கைக்கு அகப்படும்படி இப்போது வந்துவிட்டான்; எனக் கிளர்ந்தது ஒத்தது - என்று பொங்கி எழுந்தது போல் இருந்தது.

அரியின்தானை - வானரப் படை. அடைக்க - தடுத்து அணைகட்ட. அலைகளை வீசிக் கொண்டு, கரையோடு மோத வந்த கடலை, கைகளை வீசி இராமனுடன் போரிட வந்ததை ஒத்திருந்தது என்பதால் "போர்க்கடல்' என்றார். கிடைக்க வந்தான் என மகிழ்ந்து கிளர்ந்தெழுந்தது என்பது கருத்து. தற்குறிப்பேற்றம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The warlike sea, lifting its strong waves like arms at its sides and roaring,
  2. seemed to surge up, saying, "He who stole away and hid
  3. my own peerless dark colour has come with the army of monkeys to dam me up —
  4. he has come within my reach!"

What the poem says

At night the sea, stirred by the rising moon, heaves and roars. The poet imagines it as an angry warrior flinging its wave-arms about.

The sea has a grudge: Irāmaṉ's dark body has "stolen" its own deep blue-black colour. Now that Irāmaṉ has come with a monkey army planning to bridge it, the sea rejoices that its enemy has come within reach. The image foreshadows the bridging of the ocean.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1puṭaikkai vaṉ tirai eṭuttu ārkkum pōrk kaṭal
uṭaik karun taṉi niṟam oḷittuk koṇṭavaṉ
aṭaikka vantāṉ eṉai ariyiṉ tāṉaiyāl
kiṭaikka vantāṉ' eṉak kiḷarntatu ottatē.