கம்பராமாயணம் 6564 · யுத்த 5.6

Section யுத்த காண்டம் / 5. இலங்கை வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'கண்ணினை அப்புறம் கரந்து போகினும்
பெண் இறை உண்டு எனின் பிடிப்பல் ஈண்டு'என
உள் நிறை நெடுங் கடல் உலகம் எங்கணும்
வெண் நிற நிலவு எனும் வலையை வீசினான்.

பொருள் · Meaning in Tamil

கண்ணினை அப்புறம் - கண்ணுக்குப் புலனாகாதபடி அப்புறத்தில்; கரந்துபோகினும் - மறைந்து சென்றாலும்; பெண் நிறம் உண்டெனில் - சீதை என்னும் பெண்ணின் உடல் இருக்குமானால்; பிடிப்பல் ஈண்டு எனா - இப்போதே பிடிப்பேன் என்று; உள் நிறை நெடுங்கடல் - உள்ளே நிறைந்த நீரையுடைய கடல் சூழ்ந்த; உலகம் எங்கணும் - இவ்வுலகம் எங்கும்; வெண் நிற நிலவு எனும் - வெண்மை நிறமான நிலவொளி என்னும்; வலையை வீசினான் - வலையைச் சந்திரன் வீசினான்.

கண்ணினை - கண்ணுக்கு; வேற்றுமை மயக்கம். நிலவை வலையாக உருவகம் செய்தார். 'இந்துவலை வீசினான் என இயையும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Even if she slips away and hides beyond sight,
  2. if there is a woman's form anywhere, I will catch it here," so saying,
  3. over the whole world girdled by the deep, brimming sea
  4. he cast the net called white moonlight.

What the poem says

The conceit continues. The moon spreads its light over the whole sea-girt world as if casting a net, determined to catch Cītai wherever she might be hidden.

The verse turns moonlight flooding every corner into a hunter's net thrown over the earth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kaṇṇiṉai appuṟam karantu pōkiṉum
peṇ niṟam uṇṭu eṉiṉ piṭippal īṇṭu' eṉā
uḷ niṟai neṭuṅ kaṭal ulakam eṅkaṇum
veṇ niṟa nilavu eṉum valaiyai vīciṉāṉ.