கம்பராமாயணம் 6563 · யுத்த 5.5

Section யுத்த காண்டம் / 5. இலங்கை வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஒன்றும் உட் கறுப்பினோடு ஒளியின் வாள் உரீஇத்
'தனிதனி முகத்தினால் என்னைத் தாழ்த்து அற
வென்றவன் துணைவனை இன்று வெல்குவேன்'
என்றது போல வந்து எழுந்தது இந்துவே.

பொருள் · Meaning in Tamil

ஒன்றும் உட் கறுப்பினோடும் - பொருந்திய உள்ளத்தே பகைமையோடும்; ஒளியின் வாள் உரீஇ - ஒளியாகிய வாளை உருவிக் கொண்டு; தன்தனி முகத்தினால் - தனது ஒப்பற்ற முகத்தினாலே; என்னைத் தாழ்த்து - என்னைத் தாழ்ந்து போகச் செய்து; அறவென்றவள் - அடியோடு வெற்றி பெற்றவளாகிய சீதாபிராட்டியின்; துணைவனை இன்று வெல்குவேன் - துணைவனான இராமபிரானை இன்று நான் வெல்லுவேன்; என்றது போல - என்று கூறுவதுபோல; இந்து வந்து எழுந்தது - வானத்திலே சந்திரன் வந்து எழுந்தான்.

கறுப்பு - களங்கம் (பகைமை). உரீஇ - உருவி (சொல்லிசை அளபெடை. ஒளியின் வாள் - உருவகம். சீதையை வெல்ல வல்லமையற்ற சந்திரன் அவள் கணவனை இன்று வெல்வேன் என்றெழுந்தான் என்பது தற்குறிப்பேற்றம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the dark grudge it held within, drawing the sword of its light,
  2. as if saying, "Her husband, she who with her peerless face
  3. humbled me and beat me utterly — him today I shall conquer,"
  4. the moon came and rose.

What the poem says

The moon rises, and the poet again invents a motive. Cītai's face is so lovely that it has always outshone and humiliated the moon.

Unable to defeat her, the moon now draws its sword of moonlight to take revenge on her husband, as moonlight sharpens a separated lover's pain. Its dark spot is pictured as the black resentment it harbours.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1oṉṟum uṭ kaṟuppiṉōṭu oḷiyiṉ vāḷ urīi
'taṉ taṉi mukattiṉāl eṉṉait tāḻttu aṟa
veṉṟavaḷ tuṇaivaṉai iṉṟu velkuvēṉ'
eṉṟatu pōla vantu eḻuntatu intuvē.