கம்பராமாயணம் 6562 · யுத்த 5.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சில் இயல் கோதையை நினைந்து - சில வகைகளாக அழகு படுத்தும் கூந்தலையுடைய சீதா பிராட்டியை நினைத்து; தேம்பிய வில்லியை - வருந்துகின்ற வில்வீரனான இராமனை; திருமனம் வெதுப்பும் வெம்மையால் - அவனது அழகிய மனத்தை வெதுப்புகின்ற வெப்பத்தால்; எல்லியைக் காண்டலும் - இரவைக் கண்டவுடனே; மலர்ந்த ஈட்டினால் - மலர்ந்திருக்கும் தன்மையால்; மல்லிகைக் கானமும் வானமும் ஒத்தது - மல்லிகைக் காடும் விண்மீன்கள் பொலியும் வானத்தை ஒத்தது.
சில் இயல் கோதை - சீதை. முடி, கொண்டை, சுருள், குழல், பனிச்சை என்று ஐந்து வகையாக அலங்கரித்தலால் "சில் இயல் கோதை” என்றார். கோதை - மலர் மாலை உவமையாகு பெயராகச் சீதையை உணர்த்தியது. வில்லி - இராமன் (வில் வீரன் என்பது பொருள், எல்லி, இரவு. ஈடு - தன்மை. செம்மையான நினைக்கும் மனமாதலின் "திருமனம்" என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With a heat that burned the noble heart of the bowman
- who pined, thinking of the lady of the finely dressed tresses,
- and by blossoming the moment it saw the night,
- the jasmine grove became just like the sky.
What the poem says
Jasmine opens at nightfall, and the poet links it to Irāmaṉ's suffering. The white jasmine flowers, scattered thick through the grove, look exactly like the stars in the sky.
But for Irāmaṉ, longing for Cītai, whose hair is dressed in the five classical styles, their fragrance only inflames his grief.