கம்பராமாயணம் 6561 · யுத்த 5.3

Section யுத்த காண்டம் / 5. இலங்கை வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மாத் தடந் திசைதொறும் மறைந்த வல் இருள்
கோத்தது கரும் கடல் கொள்ளை கொண்டு என;
நீத்த நீர்ப் பொய்கையில் நிறைந்த நாள்மலர்
பூத்த போல் மீன்களால் பொலிந்தது அண்டமே.

பொருள் · Meaning in Tamil

மாத்தடந்திசை தொறும் - (பகல் முழுதும் பரிதிக்குப் பயந்து) பெரியபரந்த திசைகள் தோறும் சென்று; மறைந்த வல் இருள் - மறைந்திருந்த வலிய இருளானது; கருங்கடல் கொள்ளை கொண்டென - கரிய கடல் நீர் உலகத்தைக் கொண்டது போல; கோத்தது - வந்து கவிந்து கொண்டது; நீத்த நீர்ப் பொய்கையில் - நிறைந்த நீரையுடைய பொய்கையிலே; நிறைந்த நாண்மலர்பூத்தென - நிறைந்த அன்றலர்ந்தமலர்கள் பூத்தது போல; அண்டம் மீன் குலம் பொலிந்தது - வானத்திலே விண்மீன்கள் விளங்கின.

நீத்தம் - வெள்ளம் நிறைந்த நீர் என்பது பொருள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The strong darkness that had hidden in every vast quarter
  2. closed in, as though the black sea had plundered the world;
  3. and as fresh flowers bloom thick in a pool brimming with water,
  4. the hosts of stars shone out across the sky.

What the poem says

The poet describes nightfall. Darkness, which had hidden in the far corners of the world all day for fear of the sun, now floods back over everything, as if the black ocean had overrun the earth.

Stars appear thickly across the sky, like newly opened flowers covering a full pond.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māt taṭan ticaitoṟum maṟainta val iruḷ
kōttatu karuṅ kaṭal koḷḷai koṇṭeṉa;
nītta nīrp poykaiyil niṟainta nāḷmalar
pūtteṉa mīṉ kulam polintatu aṇṭamē.