கம்பராமாயணம் 6560 · யுத்த 5.2

Section யுத்த காண்டம் / 5. இலங்கை வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சந்தி வந்தனைத் தொழில் முடித்து - (சூரியன் மறைந்ததும் மாலை நேரம் என்பதால் இராமபிரான் சந்தியாவந்தனம் செய்து முடித்து); தன் நெடும் புந்தி நொந்து - தனது நெடிய மனம் நொந்து; இராமனும் உயிர்ப்ப - இராமபிரானும் (சீதையைப் பிரிந்த துயரால்) பெருமூச்சு விட; மதனன் பூங்கணை சிந்திவந்து - மன்மதனும் மலரம்புகளை எய்து கொண்டு வந்து; இறுத்தனன் - அங்கு தங்கலாயினான்; தீநிறத்து அந்திவந்து இறுத்தது - நெருப்புப் போன்ற நிறத்தை உடைய அந்தி மாலை வந்தடைந்தது; அண்டம் கறுத்தது - (அதனால்) வானம் இருண்டு கறுத்தது.

சந்தி வந்தனை - சந்தியா காலத்தில் செய்யும் வழிபாடு (சந்தியாவந்தனம்). நெடுமை - இங்குப் பெருமை. புந்தி - மனம். மதனன் - மன்மதன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he had finished the evening rites of worship, his great
  2. mind aching, Irāmaṉ sighed; and Maṉmataṉ, scattering flower-arrows,
  3. came and pitched his camp there; the fire-coloured
  4. evening came and settled; the sky grew dark.

What the poem says

Night falls. Irāmaṉ performs the evening worship, but his heart aches for Cītai and he sighs heavily.

Maṉmataṉ, the god of love, arrives with his flower-arrows to torment him, as he torments separated lovers in Tamil poetry. The flaming red sunset fades and the sky turns black.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1canti vantaṉait toḻil muṭittut taṉ neṭum
punti nontu irāmaṉum uyirppap pūṅ kaṇai
cinti vantu iṟuttaṉaṉ mataṉaṉ; tī niṟattu
anti vantu iṟuttatu; kaṟuttatu aṇṭa mē.