கம்பராமாயணம் 6559 · யுத்த 5.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வந்து அடி வணங்கிய நிருதர் மன்னவற்கு - பாடி வீட்டை வலம் வந்தபின், வந்து இராமபிரானது திருவடிகளை வணங்கிய அசுரர் குலவேந்தனான வீடணனுக்கு; அந்தம் இல்லாததோர் உறையுள் - எல்லையற்ற பரப்பை உடைய ஒரு உறைவிடத்தை, அவ்வழித் தந்தனன் விடுத்தபின் - அந்தப் பாசறையிலே கொடுத்து அவனை அனுப்பி வைத்தபின்; இரவிதன் கதிர் சிந்தின வெய்ய என்று எண்ணி - சூரியன் தனது கதிர்கள் வெப்பம் மிக்கன என நினைத்து; தீர்ந்தனன் - தனது கிரணங்களைச் சுருங்கச் செய்தான் மறைந்தான்.
தந்தனன் - தந்து முற்றெச்சம். இலங்கை வேந்தனான வீடணனை வெப்பமான கதிர்கள் வருத்தும் என்பதால் சூரியன் 'தன் கதிர் சிந்தின வெய்ய” என்று நினைத்து கதிர்களைச் சுருக்கிக் கொண்டு மறைந்தான் என்பது கருத்து. இது தற்குறிப்பேற்றவணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he had given the king of the rākṣasas, who came and bowed at his feet,
- a boundless dwelling there and sent him off, the Sun,
- thinking, "The rays I have shed are too hot,"
- drew them in and was gone.
What the poem says
A new canto begins, in which Irāmaṉ learns from Vīṭaṇaṉ about Ilaṅkai's defences. After the procession Vīṭaṇaṉ bows again at Irāmaṉ's feet and is given spacious quarters in the camp.
Then the sun sets. The poet playfully supplies a reason: the Sun withdrew his rays because he feared their heat might trouble the newly honoured king. Tamil poetics calls this poetic fancy, taṟkuṟippēṟṟam, ascribing an imagined motive to a natural event.