கம்பராமாயணம் 6558 · யுத்த 4.152

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இற்றை நாள் அளவும், பாரில் இருடிகள், இமையோர், ஞானம்
முற்றினார், அன்பு பூண்டார், வேள்விகள் முடித்து நின்றார்,
மற்றும் மாதவரும், எல்லாம், 'வாள் எயிற்று இலங்கை வேந்தன்
பெற்றது ஆர் பெற்றார்!'என்று வியந்தனர், பெரியோர் எல்லாம்.

பொருள் · Meaning in Tamil

பெரியோர் எல்லாம் - வீடணன் பெற்ற பெருமையை உணர்ந்த உலகத்துப் பெரியவர்கள் எல்லாம்; இற்றை நாள் அளவும் - இந்த நாள் வரையும்; இருடிகள், இமையோர் யாரும் - முனிவர்களும், தேவர்களும் எவரும், ஞானம் முற்றினார் அன்பு பூண்டார் - ஞானத்தில் முதிர்ந்தவர்கள், பக்தி பூண்டு ஒழுகுபவர்கள்; வேள்விகள் முடித்து நின்றார் - சிறந்த வேள்விகளைச் செய்து நிறைவேற்றியவர்கள்; மற்று மாதவரும் எல்லாம் - மற்றும் சிறந்த தவமுடைய யாவரும் ஆகிய இத்தகைய யாவரும்; வாள் எயிற்று இலங்கை வேந்தன் - ஒளிபொருந்திய பற்களை உடைய இந்த இலங்கை வேந்தனான வீடணன்; பெற்றது ஆர் பெற்றார் - இந்தப் பேற்றினை யார் பெற்றார்கள்; என்று வியந்தனர் - என்று கூறி வியப்படைந்தார்கள்.

இருடிகள் - முனிவர்கள் (ரிஷி என்ற வடசொல்லின் தமிழ் வடிவம்). இமையோர் - தேவர். ஞானம் முற்றினார் - ஞானத்தில் சிறந்த ஞானிகள். அன்பு பூண்டார் - பக்தி மிக்கவர்கள். அரக்கனாய்ப் பிறந்தும் சிறந்த பேறு பெற்றான் என்பதால் வீடணன் 'வாள் எயிற்று இலங்கை வேந்தன்' எனக் குறிப்பிட்டார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Up to this very day, of all the sages, the gods, those perfected
  2. in wisdom, those devoted in love, those who have completed sacrifices,
  3. and all the other great ascetics — who has won what the king of Ilaṅkai
  4. with gleaming fangs has won?" So all the great ones marvelled.

What the poem says

All the great beings of the world, sages, gods, the wise, the devout, those who have offered sacrifices and great ascetics, are astonished.

None of them, in all of history, has won what Vīṭaṇaṉ has. The poet deliberately calls him the king "with gleaming fangs", reminding us that he was born a rākṣasa, which makes his good fortune all the more wonderful. This verse closes the canto of Vīṭaṇaṉ's refuge.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṟṟai nāḷ aḷavum, yārum iruṭikaḷ, imaiyōr, ñāṉam
muṟṟiṉār, aṉpu pūṇṭār, vēḷvikaḷ muṭittu niṉṟār,
maṟṟu mā tavarum, ellām, 'vāḷ eyiṟṟu ilaṅkai vēntaṉ
peṟṟatu ār peṟṟār!' eṉṟu viyantaṉar, periyōr ellām.