கம்பராமாயணம் 6557 · யுத்த 4.151

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தேடுவார் தேட நின்ற சேவடி, தானும் தேடி
நாடுவான், அன்று கண்ட நான்முகன் கழீஇய நல் நீர்
ஆடுவார் பாவம் அஞ்சும் நீங்கி, மேல் அமரர் ஆவார்;
சூடுவார் எய்தும் தன்மை சொல்லுவார் யாவர்? கண்டீர்.

பொருள் · Meaning in Tamil

தேடுவார் தேட நின்ற சேவடி - ஞானிகளும் அடியார்களும் தேடியும் காணாத பரமனது திருவடிகளை; தானும் தேடி நாடுவான் - தானும் தேடி அடைய விரும்பியவனாய்; அன்று கண்ட நான்முகன் - திருவிக்கிரமனாக வளர்ந்த திருமாலின் திருவடிகள் அப்போது கண்ட பிரமன்; கழீஇய நன்னீர் ஆடுவார் - அத்திருவடிகளைத் திருமஞ்சனம் செய்த நல்ல நீரிலே மூழ்குபவர்கள்; பாவம் ஐந்தும் நீங்கி - பாவங்கள் ஐந்தும் நீங்கப்பெற்றவராய், மேல் அமரர் ஆவார் - விண்ணுலகத்துத் தேவர்கள் ஆவார் என்றால்; சூடுவார் எய்தும் தன்மை - அந்தத் திருவடிகளைத் தலையில் சூடிக் கொள்பவர்களின் சிறந்த தன்மையை; யாவர் சொல்லுவார் சொல்லீர் - யார் சொல்ல வல்லவர் சொல்லுங்கள்.

தேடுவார் - பரமனது பாதத்துணையைத் தேடும் பக்தரும், ஞானிகளுமாவார். தேடநின்ற சேவடி - அத்தகைய ஞானிகளும் இன்றும் அடைய இயலாத திருவடிகள் என்பது பொருள். அன்று - திருமால் திருவிக்கிரம் அவதாரம் செய்த காரணம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The red feet that seekers seek and still stand beyond them — the Four-faced One, seeking them too,
  2. found them that day and washed them; those who bathe in that good water
  3. are freed from the five great sins and become gods on high;
  4. then who can tell what those attain who wear those feet upon their heads? Tell me!

What the poem says

The poet praises what Vīṭaṇaṉ has gained. When Viṣṇu, as Trivikrama, grew to measure the universe, his foot reached Brahmā's world, and Brahmā washed it. That water became the holy Gaṅgā; bathing in it removes the five great sins and raises one to heaven.

If merely bathing in the water from those feet does so much, who can describe the blessing of someone, like Vīṭaṇaṉ, who wears those very feet on his head?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēṭuvār tēṭa niṉṟa cēvaṭi, tāṉum tēṭi
nāṭuvāṉ, aṉṟu kaṇṭa nāṉmukaṉ kaḻīiya nal nīr
āṭuvār pāvam aintum nīṅki, mēl amarar āvār;
cūṭuvār eytum taṉmai colluvār yāvar? collīr.