கம்பராமாயணம் 6556 · யுத்த 4.150

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அந்தம் இல் குணத்தினானை அடியிணை முடியினோடும்
சந்தன விமானம் ஏற்றி, வானரத் தலைவர் தாங்க,
'இந்திரற்கு அரிய செல்வம் எய்தினான் இவன்'என்று ஏத்தி
மந்தரத் தடந்தோள் வீரர் வலஞ் செய்தார் தானை வைப்பை.

பொருள் · Meaning in Tamil

அந்தம் இல் குணத்தினானை - அளவில்லாத நற்குணங்களை உடைய வீடணனை; அடியிணை முடியினோடு - இராமபிரானுடைய பாதுகைகளாகிய திருமுடியுடனே; சந்தன விமானம் ஏற்றி - சந்தன மரத்தால் செய்த விமானத்திலே ஏறச் செய்து; வானரத்தலைவர் தாங்க - அந்த விமானத்தை வானரப் படைத்தலைவர்கள் தாங்கி வர; இந்திரற்கு உரிய செல்வம் - இந்திரனுடைய செல்வத்துக்கு நிகரான அரசுச்செல்வத்தை; எய்தினான் இவன் என்று ஏத்தி - வீடணன் பெற்றான் என்று போற்றி; சுந்தரத்தடந் தோள் வீரர் - அழகிய அகன்ற தோள்களை உடைய வீரர்களான இலக்குவனும் சுக்கிரீவனும், தானை வைப்பை வலம் செய்தார் - வானரப்படை தங்கியுள்ள பாடி வீட்டைச் சுற்றி வலம் செய்தனர்.

வீடணன் நற்குணம் நிறைந்தவன் ஆதலின் "அந்தம் இல்குணத்தினான்” என்று சிறப்பிக்கப்பட்டான். அரசப் பதவிக்கேற்ப சிறந்த சந்தன மரத்தால் செய்யப்பட்ட விமானம். தானை வைப்பு - படைகள் தங்கியுள்ள பாசறை. இந்திரற்குரிய செல்வம் - இந்திரனது செல்வத்துக்குச் சமமானது இலங்கையின் ஆட்சிச் செல்வம் என்னும் பொருள் உடையது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Setting the one of endless virtues, with the crown of the two feet,
  2. on a palanquin of sandalwood borne by the monkey chiefs,
  3. and praising him, "He has won wealth worthy of Indra,"
  4. the heroes with shoulders broad as Mount Mantara went round the army's camp.

What the poem says

The procession takes place. Vīṭaṇaṉ, still wearing Irāmaṉ's sandals as his crown, is seated in a sandalwood palanquin carried on the shoulders of the monkey commanders.

Ilakkuvaṉ and Cukkirīvaṉ lead him round the camp, while all acclaim him as having won a kingdom as rich as that of Indra, king of the gods.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1antam il kuṇattiṉāṉai aṭiyiṇai muṭiyiṉōṭum
cantaṉa vimāṉam ēṟṟi, vāṉarat talaivar tāṅka,
'intiraṟku uriya celvam eytiṉāṉ ivaṉ' eṉṟu ētti
mantarat taṭan tōḷ vīrar valam ceytār tāṉaivaippai.