கம்பராமாயணம் 6555 · யுத்த 4.149
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இன்னதோர் செவ்வித்தாக - இவ்வாறு நிகழும் சமயத்தில்; இராமனும் - இராமபிரானும் (இலக்குவனை நோக்கி); மன் நெடுங்குமர - நிலைபெற்ற சிறந்த அரசகுமாரனே!; இலங்கை வேந்தன் - இலங்கை அரசனாகிய வீடணன்; தன் நெடும் செல்வம் - தனக்குரிய இலங்கையின் அரசுச் செல்வத்தை; தானே பெற்றமை - தானே பெற்றதனை; பலரும் கேட்ப - எல்லோரும் கேட்டுத் தெரிந்து கொள்ள; பல் நெடும் தானை சூழ - பெரிய சேனை சூழ்ந்து வர; பகலவன் சேயும் நீயும் - சூரிய குமாரனான சுக்கிரீவனும் நீயும்; பாடி வீட்டினை வலம் செய்க என்றான் - நமது வானரப்படை தங்கியுள்ள பாடிவீட்டை வலம் வருவீராக என்றான்.
செவ்வி - சந்தர்ப்பம் (சமயம்). தானையின் பெருமை புலப்பட "பல்நெடும்தானை" என்றார். பாடிவீடு - பாசறை. முடிசூடிய பின் நகர்வலம் வருதல் மரபு என்பதால் 'பாடி வீட்டினை வலம் செய்க' என்றான். மன் - மன்னன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At this fitting moment, Irāmaṉ, so that all might hear
- that the king of Ilaṅkai had himself gained his great fortune,
- said: "With the vast and many-ranked army around you, you and the son of the Sun,
- O prince of the enduring line, go round the encampment in procession."
What the poem says
Irāmaṉ asks Ilakkuvaṉ and Cukkirīvaṉ to lead Vīṭaṇaṉ in procession around the army camp with the whole host.
After a coronation a new king traditionally goes round his city, so this serves as Vīṭaṇaṉ's royal procession. It also lets the entire army know that he is now king of Ilaṅkai and their ally.