கம்பராமாயணம் 6609 · யுத்த 5.51
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தன்னையும் தெறும் தருமம் என்று - அறத்துக்கு மாறாக நடப்பவர்களை அழிக்கும் அறக்கடவுள் தன்னையும் அழிக்கும் என்று; இறை மனம் தாழான் - சிறிதும் மனத்திலே கருதாமல் விரைந்து பாவச் செயல் புரிபவன்; முன்னவன் தரப் பெற்றதோர் - முன்னவனாகிய பிரமதேவன் தரப் பெற்றதாகிய ஒரு; முழுவலிச் சிலையான் - முழுமையான வலிமையை உடைய வில்லை உடையவன்; அன்னவன் தனக்கு இளையவன் - அந்த இந்திரசித்துக்குத் தம்பி; பின் ஓர் இந்திரன் இலாமையின் - இந்திரசித்து வென்ற இந்திரனைத் தவிர வேறு ஒரு இந்திரன் இல்லாமையால், அப்பெயர் ஒழித்தான் - அந்தப் பெயரை நீக்கினவனாய்; பேர் அதிகாயன் - அதிகாயன் என்னும் பெயர் கொண்டவனாய் உள்ளான்.
'முன்னவன்' - படைப்புத் தொழிலுக்குரியவன் என்பதாலும் இராவணன் குடிக்கு முதல் தலைவன் என்பதாலும் பிரமனை 'முன்னவன்' என்றான் "பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி" (கம்ப. 2770) என்ற சூர்ப்பணகை உரையாலும் பிரமாவின் வழிவந்தவன் இராவணன் என்பது புலனாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He does not bend his mind in the least to the thought that Dharma may destroy him too;
- he holds a bow of full might, given by the First One;
- younger brother to that one, he gave up that title
- since there was no second Intiraṉ left; his name is Atikāyaṉ.
What the poem says
Atikāyaṉ is Intiracittu's younger brother. He sins without a moment's thought that righteousness might turn and destroy him. His mighty bow was a gift from Piramaṉ, called 'the First One' as creator and as the founder of Irāvaṇaṉ's line.
There is a witty touch: he could not take a title like his brother's, 'Conqueror of Intiraṉ', because there was only one Intiraṉ to conquer and his brother had already done it. So he is simply Atikāyaṉ, 'the Huge-Bodied'.