கம்பராமாயணம் 6608 · யுத்த 5.50

Section யுத்த காண்டம் / 5. இலங்கை வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கோள் இரண்டையும் - (கோள்கள் ஒன்பதிலும் முதன்மை வாய்ந்த) சூரியன், சந்திரன் என்னும் இரண்டினையும்; கொடுஞ் சிறைவைத்த அக்குமரன் - கொடிய சிறையிலே வைத்த இராவணனது மகனான; மூளும் வெஞ்சினத்து - மூண்டெழும் கொடிய வெகுளியை உடைய; 'இந்திரசித்து' என மொழிவான் - இந்திரசித்து எனக் கூறப்படுபவன்; ஆளும் இந்திரற்கு - விண்ணுலகத்தை ஆளும் தேவேந்திரனுக்கு; அன்னவன் பிணித்ததன் பின்னை - இந்திரசித்து அவனை வென்று கட்டிவைத்த பின்பு; இனம் தழும்பு தாளினும் உள தோளினும் உள - இந்திரனுடைய கால்களிலும் தோள்களிலும் இன்னும் தழும்புகள் உள்ளன.

இந்திரனுடன் போரிட்டு வென்றமையால் 'இந்திரசித்து' எனப் பெயர் கொண்டான் இராவணன் மகனான மேகநாதன். இரு கோள்களையும் சிறை வைத்த இராவணன் மகன் என்பதால் "சிறை வைத்தவன் குமரன்" என்ற பாடம் சிறந்தது என்பர் வை.மு.கோ. 'இரு கோளும் சிறைவைத்தாற்கு இளையேன்' என்ற சூர்ப்பனகையின் கூற்று இதற்குச் சான்றாகும். இந்திரனைப் பிணித்தமையால் அவனுடைய தாளிலும், தோளிலும் தழும்பு இன்னும் மாறாமல் இருக்கிறது என இந்திரசித்தன் ஆற்றலைக் கூறுவான் 'சதமகனைத் தளையிட்டு' எனவும் 'இருகாலில் புரந்தரனை இருஞ்சிறையின் இடுவித்து' எனவும் சூர்ப்பனகையின் கூற்றில் வைத்து முன்பும் இந்திரனைப் பிணித்த செய்தியைக் கூறியுள்ளார் (கம்ப.2842, 2843)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. That prince who put both the planets in cruel prison,
  2. he of blazing, fierce anger, who is called Intiracittu:
  3. since he bound Intiraṉ who rules the heavens,
  4. there are scars still on his feet and on his shoulders.

What the poem says

Intiracittu, Irāvaṇaṉ's son Mēkanātaṉ, earned his name, 'Conqueror of Intiraṉ', by defeating and binding the king of the gods; Intiraṉ still bears the scars of those bonds on his legs and shoulders.

The commentary prefers a reading in which it is Irāvaṇaṉ, the father, who imprisoned the two planets, the sun and the moon, citing Cūrppaṇakai's earlier boast that she is the younger sister of the one who jailed them both. Cūrppaṇakai had also mentioned Intiraṉ's binding.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kōḷ iraṇṭaiyum koṭuñ ciṟai vaitta ak kumaraṉ
mūḷum veñ ciṉattu intiracittu eṉa moḻivāṉ;
āḷum intiraṟku aṉṉavaṉ piṇittataṉ piṉṉai,
tāḷiṉum uḷa, tōḷiṉum uḷa, iṉam taḻumpu.'