கம்பராமாயணம் 6607 · யுத்த 5.49

Section யுத்த காண்டம் / 5. இலங்கை வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தம்பி; முற் பகல் சந்திரர் நால்வரில் தயங்கும்
கும்ப மால் கரிக் கோடு இரு கைகளால் வாங்கிச்
செம்பொன் மால் வரை மதம் பட்டதாம் எனத் திரிந்தான்,
கும்ப கன்னன் என்று உளன் பண்டு தேவரைக் குமைத்தான்.

பொருள் · Meaning in Tamil

தம்பி - அந்த இராவணனுடைய தம்பி; முற்பகல் சந்திரர் நால்வரின் தயங்கும் - முதல் நாளைய பிறைச் சந்திரர் நால்வர் சேர்ந்தது போல விளங்கும்; கும்ப மாகிரிக் கோடு - மத்தகத்தையுடைய பெரிய மலை போன்ற யானையான ஐராவதத்தின் தந்தங்களை; இரு கைகளால் கழற்றி - தனது இரண்டு கைகளாலும் வாங்க; செம்பொன் மால்வரை - செம்பொன் மலையான பெரியமேருமலை; மதம் பட்டதாமெனத் திரிந்தான் - மதம் கொண்டு அலைந்தது எனும்படி எங்கும் திரிந்தவன்; பண்டு தேவரைக் குமைத்தான் - முன்பு தேவர்களையெல்லாம் அடியோடு அழித்த; கும்பகன்னன் என்று உளன் - கும்பகன்னன் என்ற பெயருடைய வீரன் உள்ளான்.

முற்பகல் அமாவாசைக்குப் பின் முதல் நாள், 'சந்திரர் நால்வர்' என்றது பிறைச் சந்திரர் நான்கு பேர் சேர்ந்தது போல விளங்கும் நான்கு தந்தங்களை. கும்பம் - மத்தகம். இந்திரனுடைய ஐராவதம். அந்த யானையின் தந்தங்களை எவ்வித முயற்சியுமின்றி சுலபமாகக் கைப்பற்றினான் என்பதைக் கழற்றி என்றான். 'மேருமலை மதம் கொண்டு திரிந்தது போலத் திரிந்தான்' என்பது இல் பொருள் உவமை குமைத்தல் - அழித்தல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His younger brother: who wrenched out with his two hands the tusks,
  2. gleaming like four crescent moons of the first day, of the great mountain with the domed brow,
  3. and roamed about as if the great mountain of red gold had gone into must;
  4. there is Kumpakaruṇaṉ, who long ago crushed the gods.

What the poem says

Now Irāvaṇaṉ's brother Kumpakaruṇaṉ. He once plucked out, as easily as pulling something loose, the four tusks of Intiraṉ's elephant Airāvatam, tusks curved and bright like four new crescent moons. He then strode about like Mount Mēru itself gone mad with must. This is an impossible comparison, since a mountain cannot go into must. Long ago he crushed the gods.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tampi; muṟpakal cantirar nālvariṉ tayaṅkum
kumpa māk kirik kōṭu iru kaikaḷāl kaḻaṟṟi
cem poṉ māl varai matam paṭṭatām eṉat tirintāṉ,
kumpakaṉṉaṉ eṉṟu uḷaṉ paṇṭu tēvaraik kumaittāṉ.