கம்பராமாயணம் 6606 · யுத்த 5.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சேனை காவலன் - இந்தப் பிரகத்தன் இராவணனுடைய சேனைக்குக் காவலன் ஆவான்; இந்திரன் சிந்துரச் சென்னியானை - தேவேந்திரனுடைய சிந்தூரம் அப்பிய மத்தகத்தை உடைய ஐராவதமானது; கால்குலைந்து ஆழியோர் ஏழும் விட்டகல - கால்கள் தடுமாறி ஏழுகடல்களையும் தாண்டிப் பயந்தோடவும்; ஏனைவானவர் - மற்றுமுள்ள தேவர்கள் அத்தனைபேரும்; இருக்கைவிட்டு இரியலுற்று அலைய - தங்கள் இருப்பிடங்களை விட்டு ஓடி அலைந்து திரியவும்; சோனை மாரியின் - விடாது பெய்யும் மழையைப் போல; சுடுகணை பலமுறை துரந்தான் - சுடுகின்ற அம்புகளைப் பலமுறையும் செலுத்தியவனாவான்.
சிந்துரச் சென்னியானை - சிந்தூரம் பூசிய மத்தகத்தை உடைய யானையாகிய ஐராவதம். என்ற வெள்ளையானை: யானைகளின் மத்தகத்தில் சிந்தூரம் அணிவிப்பது வழக்கம். இதனை 'சிந்தூரத் திலக நுதல் சிந்துரத்தின் மருப் பொசித்த செங்கண் மாலே' என்ற வில்லிபாரதத்தாலும் (கிருஷ்ணன் தூதுச் சருக்கம்) அறியலாம். குலைந்து தடுமாறி ஐராவதம் அஞ்சி ஓடியது என்பதால் இந்திரன் அஞ்சியகன்றது பெறப்படும். ஏனைவானவர், இந்திரனைத் தவிர, மற்றுமுள்ள தேவர்கள். சோனை மாரி - விடாது பெய்யும் மழை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He is the guardian of the army; so that Intiraṉ's vermilion-browed
- elephant, its legs failing, fled beyond all seven seas,
- and the other gods left their seats and wandered in rout,
- he loosed burning arrows many times like a pouring rain.
What the poem says
Pirakattaṉ is the guardian of Irāvaṇaṉ's army. Once he rained burning arrows like a ceaseless downpour on the gods, so that Intiraṉ's elephant Airāvatam, its forehead painted with vermilion, staggered and fled beyond the seven seas, and the other gods abandoned their homes. If the elephant fled, Intiraṉ fled with it.
Painting an elephant's brow with vermilion was customary; the commentary cites a line from Villiputtūrār's Bhāratam as proof.