கம்பராமாயணம் 6611 · யுத்த 5.53
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இனைய தன்மையர் வலி இஃது - இராவணனது துணைவர் தம்பி, மக்கள் ஆகிய இத்தன்மையோர் வலிமை இது; இராவணன் என்னும் அனையவன் திறம் - இராவணன் என்ற பெயர் உடைய அவனது திறத்தை; யானறி அளவெலாம் அறைவென் - யான் அறிந்திருக்கும் அளவுக்கு எல்லாம் எடுத்துக் கூறுவேன்; நான்முகன் தகைமகன் சிறுவற்குத் தனையன் - பிரம தேவனது தகுதிமிக்க மகனான புலத்தியனுக்கு மகனான விச்சிரவசுவின் மகனாகும்; தவத்தால் - இராவணன் செய்த தவத்தினாலே; முனைவர் கோன் வரம் - அந்தணர் தலைவனான பிரமன் தந்தவரம்; முக்கணான் வரத்தொடும் உயர்ந்தான் - மூன்று கண்களை உடைய சிவபெருமான் தந்த வரம் இவைகளால் உயர்ந்தவனானான்.
பிரமனுக்கு மகன் புலத்தியன்; அவன் மகன் விச்சிரவசு; அவன் மகன் இராவணன். முனைவர் கோன் - அந்தணர் தலைவன் (நான்முகன் பிரமன் தந்தவரம் முக்கோடி வாழ்நாள். முக்கணான் தந்த வரம் "யாராலும் வெலப்படாய் எனக் கொடுத்தவாள்" (சந்திரகாசம்)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Such is the strength of men like these. Of the one called Irāvaṇaṉ
- I shall tell his powers as far as I know them:
- son of the son of the worthy son of the Four-Faced One, through his penance
- he rose high with the boon of the lord of sages and the boon of the Three-Eyed One.
What the poem says
Having described Irāvaṇaṉ's allies, brothers and sons, Vīṭaṇaṉ turns to Irāvaṇaṉ himself. He is the great-grandson of Piramaṉ: Piramaṉ's son Pulattiyaṉ fathered Viccuravacu, whose son is Irāvaṇaṉ. Through penance he won boons from Piramaṉ, a life of three crores of years, and from Civaṉ, the sword Cantirakācam with the promise that no one would defeat him.