கம்பராமாயணம் 6612 · யுத்த 5.54
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எள்இல் ஐம்பெரும் பூதமும் - எவரும் சிறிதென இகழாத மண், நீர் கால், தீ என்ற ஐந்து பெரிய பூதங்களும்; யாவையும் உடைய - இவற்றின் வேறுபாட்டால் உண்டான பிற எல்லாப் பொருள்களையும் உடையவனாகிய, புள்ளிமான் உரி ஆடையன் - புள்ளிகளை உடைய புலியின் தோலை ஆடையாக அணிந்துள்ள சிவபிரான்; உமையொடும் பொருந்தும் - உமாதேவியுடன் தங்கியிருக்கும்; வெள்ளி அம் பெருங் கிரியினை - வெள்ளியங்கிரியாகிய பெரிய மலையினை; வேரொடும் வாங்கி அள்ளி - வேரோடு பேர்த்து அள்ளி; உலகெலாம் அனுங்க - எல்லா உலகங்களும் வருந்தும்படி; விண் தொட எடுத்தனன் - விண்ணைத் தொடும்படி எடுத்தவன்.
எள்ளில் - இகழ்தல் இல்லாத (சிறிதென்று எவரும் இகழ்ந்து கூறமுடியாத என்பது பொருள். புள்ளி மான் இங்கே வேங்கைப் புலியைக் குறித்தது. தாருக வனத்து முனிவர்கள் வேள்வித் தீயில் உருவாக்கி ஏவிய புலியைக் கொன்று அதன் தோலை ஆடையாகக் கொண்டவர் சிவபிரான். அனுங்குதல் - வருந்துதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The great Silver Mountain, where he who owns the five great elements beyond scorn and all things,
- he who wears the skin of the spotted beast, dwells with Umai,
- he tore up by the roots and, scooping it up,
- lifted it to touch the sky, so that all the worlds were distressed.
What the poem says
Vīṭaṇaṉ recalls Irāvaṇaṉ's most famous feat: he uprooted Kailāsam, the Silver Mountain, where Civaṉ lives with Umai, and lifted it toward the sky, shaking all the worlds.
Civaṉ is described as the lord of the five elements and of everything formed from them, and as wearing the hide of a 'spotted beast', here the tiger. The commentary recalls the story of the sages of the Tāruka forest, who conjured a tiger from their sacrificial fire to attack Civaṉ; he killed it and wore its skin.