கம்பராமாயணம் 6613 · யுத்த 5.55

Section யுத்த காண்டம் / 5. இலங்கை வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஆன்ற எண் திசை உலகு எலாம் சுமக்கின்ற யானை,
ஊன்று கோடு இறத் திரள் புயத்து அழுத்திய உரவோன்,
தோன்றும் என்னவே துணுக்கம் உற்று இரிவர், அத்தொகுதி
மூன்று கோடியின் மேல் ஒரு முப்பத்து மூவர்.'

பொருள் · Meaning in Tamil

ஆன்ற எண் திசை - விசாலமான எட்டுத் திசைகளிலும் நின்று; உலகெலாம் சுமக்கின்ற யானை - உலகத்தை எல்லாம் சுமக்கின்ற திக்கு யானைகளின்; ஊன்று கோடு இற - தனது மார்பில் ஊன்றிய தந்தங்கள் முறியும்படி; திரள்புயத்து அழுத்திய ஒண்மை - அதனைத்தன் திரண்ட தோள்களிலே அழுந்தச் செய்த மிக்க வலிமை; தோன்றும் என்னவே - காணப்படும் என்ற மாத்திரத்தில்; அத்தொகுதி மூன்று கோடியின் மேல் - தொகுதியான மூன்று கோடிக்கு மேல்; ஒரு முப்பத்து மூவர் - முப்பத்து மூன்று பேராக இருக்கும் தேவர்கள்; துணுக்கம் உற்று இரிவர் - நடுங்கிக் கொண்டு விலகி ஓடுவார்கள்.

ஆன்ற - விசாலமான (நிறைந்த என்பதும் ஒரு பொருள். ஒண்மை நிறைவு, ஒளி, மிகுதி என்ற பொருள் கொண்ட சொல் இங்கே வலிமை குறித்தது. திக்கு யானைகளுடன் போரிட்டு அவற்றின் முறிந்த தந்தங்களைத் தனது மார்புக்குக் கவசமாக அணிந்து கொண்டவன் இராவணன் என்பது உத்தர காண்டத்தில் கூறப்பட்டுள்ள செய்தி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The might with which, on his massive shoulders, he pressed the elephants
  2. that bear all the world in the eight wide directions, until the tusks they drove in snapped:
  3. the moment one says it may appear, they tremble and flee, that host
  4. of thirty-three crores and more, the gods.

What the poem says

Irāvaṇaṉ once fought the eight elephants that hold up the world at the eight points of the compass. Their tusks struck his chest and shoulders and broke off against him; according to the Uttara Kāṇṭam he wore the broken tusks as armour on his chest. Now, at the mere suggestion that this strength might show itself, all thirty-three crores of gods tremble and run.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'āṉṟa eṇ ticai ulaku elām cumakkiṉṟa yāṉai,
ūṉṟu kōṭu iṟat tiraḷ puyattu aḻuttiya oṇmai,
tōṉṟum eṉṉavē tuṇukkamuṟṟu irivar, at tokuti
mūṉṟu kōṭiyiṉmēl oru muppattu mūvar.'