கம்பராமாயணம் 6706 · யுத்த 6.74

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பருப்பதம் வேவது என்னப் படர் ஒளி படரா நின்ற
உருப்பெறக் காட்டி நின்று, 'யான் உனக்கு அபயம்'என்ன,
அருப்பு உறப் பிறந்த கோபம் ஆறினான், ஆறா ஆற்றல்
நெருப்பு உறப் பொங்கும் வெம்பால் நீர் உற்றது அனைய நீரான்.

பொருள் · Meaning in Tamil

பருப்பதம் வேவது என்ன - ஒரு மலையே நெருப்புப் பற்றி எரிவது போல; படர் ஒளி படரா நின்ற உருப்பெறக் காட்டி நின்று - பரவிய ஒளி படர்ந்து நின்று தனது வடிவத்தை நன்றாகக் காட்டி நின்று; நான் உனக்கு அபயம் என்ன - உனக்கு நான் அடைக்கலம் என்று வருணன் கூற; அருப்பறப் பிறந்த கோபம் ஆறினான் - இராமபிரான் மிகுதியாக உண்டான சினம் தணிந்தான்; ஆறா ஆற்றல் நெருப்பு உற - தணியாத வலிமை கொண்ட நெருப்புப் பொருந்தலால்; பொங்கும் வெம்பால் - பொங்கிய காய்ந்த பாலில்; நீர் உற்றது அன்ன நீரான் - நீர் தெளித்தால் தணிவது போன்ற தன்மையன் ஆயினான்.

பருப்பதம் - மலை. உருப்பெறக் காட்டல் - வடிவத்தை நன்றாகக் காட்டல். அரும்பு + அற என்பது அரும்பற என்றாகி, பின்னர் அருப்பற என்று வலித்தது. அரும்பு இங்கே முதனிலைத் தொழிற்பெயர் (அரும்புதல்). அரும்புதல் அளவுகூட இல்லாமல் கோபம் ஆறியது என்பதாம். மலையே வேவது போன்ற தோற்றத்தோடு வந்த வருணன் 'நான் உனக்கு அபயம்' என அபயக் குரல்தந்தான். அதனைக் கேட்டும், வருணனது வடிவத்தைக் கண்டும் பொங்கும் பாலில் நீர் தெளித்தால் தணிவது போல, இராமபிரான் சினம் அடங்கினான் என்க. நீரான் - தண்மையன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As he stood showing his form clearly, with a spreading glow upon it
  2. as of a mountain on fire, and said, 'I take refuge in you',
  3. the anger that had sprung up subsided till not a bud of it remained, and he became
  4. like hot milk boiling over on an unrelenting fire when water is sprinkled on it.

What the poem says

Varuṇaṉ stands before Rāmaṉ, plainly visible now, glowing like a burning mountain from the fire around him, and declares, 'I am your refugee.' At once Rāmaṉ's fury vanishes completely, 'not even a bud of it left', just as milk boiling over a fierce fire settles the instant a little water is sprinkled on it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paruppatam vēvatu eṉṉap paṭar oḷi paṭarāniṉṟa
urup peṟak kāṭṭi niṉṟu, 'nāṉ uṉakku apayam' eṉṉa,
aruppu aṟap piṟanta kōpam āṟiṉāṉ, āṟā āṟṟal
neruppu uṟap poṅkum vem pāl nīr uṟṟatu aṉṉa nīrāṉ.