கம்பராமாயணம் 6707 · யுத்த 6.75

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஆறினாம்; அஞ்சல்; உன்பால் அளித்தனம் அபயம்; அன்பால்
ஈறு இலா வணக்கம் செய்து, யாம் இரந்திட, எய்தாதே,
சீறுமா கண்டு வந்த திறத்தினைத் தெரிவதாகக்
கூறு நீ, அறிஞ'என்றான்; வருணனும், தொழுது கூறும்.

பொருள் · Meaning in Tamil

ஆறினாம் அஞ்சல் உன்பால் அளித்தனம் அபயம் - கோபம் தணிந்தேன், அஞ்சாதே உனக்கு அடைக்கலம் அளித்தேன்; அன்பால் ஈறிலா வணக்கம் செய்து - உன்னிடம் அன்பு கொண்டவனாய் உனக்கு முடிவில்லாத வணக்கம் செய்து; யாம் இரந்திட எய்திடாதே - நான் பணிவுடன் கெஞ்சிக் கேட்க வராமல், சீறுமா கண்டு வந்த திறத்தினை - சீற்றம் மிகக் கொண்டு நின்றதைக் கண்டு அதன் பிறகு இங்கு வந்த தன்மையை; தெரிவதாகக் கூறுதி அறியஎன்றான் - நான் தெரிந்து கொள்ளுமாறு கூறுவாயாக என்றான் இராமபிரான்; வருணனும் தொழுது கூறும் - அதைக் கேட்ட வருணன் இராமபிரானை வணங்கிக் கூறுவானானான்;

ஆறுதல் - தணிதல். அஞ்சல் - அஞ்சாதே பணிந்து வணங்கி வேண்டிய போது வராமல், சினந்து சீறிய போது வந்த தன்மைக்கு வியந்து 'சீறுமா கண்டு வந்த திறத்தினைக் கூறுதி' என்று இராமபிரான் கேட்க அதற்கு வருணன் மறுமொழி கூறினான் என்பது கருத்து தெரிவதாக - யாவரும் உணரும்படி. அறியக் கூறுதி - யானறிந்து கொள்ளக் கூறுக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'My anger has cooled; do not fear; I have granted you refuge. When, with love,
  2. I bowed endlessly and begged, you did not come;
  3. but you came on seeing my wrath: tell me plainly
  4. how that was, so that I may know,' he said; and Varuṇaṉ, bowing, spoke.

What the poem says

Rāmaṉ, calm again, reassures Varuṇaṉ and grants him protection. But he wants an explanation: when he humbly bowed and pleaded with love, Varuṇaṉ stayed away, yet he came the moment he saw Rāmaṉ's anger. Why? Varuṇaṉ, with folded hands, begins to answer.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'āṟiṉām; añcal; uṉpāl aḷittaṉam apayam; aṉpāl
īṟu ilā vaṇakkam ceytu, yām irantiṭa, eytiṭātē,
cīṟumā kaṇṭu vanta tiṟattiṉait terivatākak
kūṟuti, aṟiya' eṉṟāṉ; varuṇaṉum, toḻutu kūṟum.