கம்பராமாயணம் 6708 · யுத்த 6.76
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பார்த்தனில் பொறையின் மிக்க பத்தினிக்கு - நிலமகளைக் காட்டிலும் பொறுமைமிக்க பத்தினியான சீதா பிராட்டி; உற்ற பண்பு வார்த்தையின் அறிந்ததல்லால் - நேர்ந்ததனை இப்போது உனது வார்த்தையால் அறிந்தேனேயல்லாது; தேவர் பால் வந்திலேன் நான் - நான் தேவர்களிடம் வந்தேனல்லேன் (எனவே பிராட்டியின் நிலையை முன்பு அறியேன்); தீர்த்த! நின் ஆணை - தூய்மை மிக்கவனே! உன் மீது ஆணையாகக் கூறுகிறேன்; ஏழாம் செறி திரைக் கடலில் - அலைகள் மிகுந்து செறிந்துள்ள ஏழாவது கடலிலே; மீனின் போர்த் தொழில் விலக்கப் போனேன் - மீன்கள் தங்களுக்குள் பகை கொண்டு செய்த போரை விலக்கச் சென்றிருந்தேன்; அறிந்திலேன் புகுந்தது ஒன்றும் - ஆதலால் இடையில் நிகழ்ந்த செயல் ஒன்றினையும் அறியாதவனானேன்.
பார் - உலகம், இங்கு நிலமகளை உணர்த்தும். பார்தனில் என்றது எதுகை நோக்கி ஓசை இன்பத்துக்காக பார்த்தனில் என வலித்தது. வருணனுக்குச் சீதைக்கு நேர்ந்த துன்பமும் தெரியாது. இராமபிரான் வருமாறு வேண்டியதும் தெரியாது என்பதனை 'புகுந்தது ஒன்றும் அறிந்திலேன்' என்றான். நீ இப்போது கூறிய உனது வார்த்தையால்தான் தெரிந்தேன் என்பதனை 'வார்த்தையின் அறிந்த தல்லால்' என்றான் ஒருவேளை தேவர்கள் எவரையாவது சந்தித்திருந்தால் அவர்கள் கூறக்கேட்டிருக்கலாம் என இராமன் கருதக் கூடும் என்பதால் 'தேவர் பால் வந்திலேன்' என்றான். தீர்த்தன் - தூய்மையானவன். மீனின் போர்த் தொழில் - சுறா மீன்கள் தங்களுக்குள்ளே போரிட்ட செயல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'What befell your wife, more patient than the Earth,
- I have learned only from your words; I had not been among the gods;
- O Pure One, I swear by you, I had gone to the seventh sea of crowded waves
- to stop a war among the fish; I knew nothing of what had happened.'
What the poem says
Varuṇaṉ swears by Rāmaṉ himself that he meant no disrespect. He had heard nothing of what happened to Cītai, a wife more patient than the Earth, until Rāmaṉ's words now; he had not been with the gods, who might have told him. He had been far away in the seventh ocean, settling a war among the sharks, and so knew nothing of Rāmaṉ's call.