கம்பராமாயணம் 6709 · யுத்த 6.77

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்றலும், இரங்கி, ஐயன், 'இத்திறம் நிற்க இந்தப்
பொன்றல் இல் பகழிக்கு அப்பால் இலக்கம் என்? புகறி'என்ன
வன்திறல் வருணன் யானும் உலகமும் வாழ்ந்தோம்'என்னக்
குன்று என உயர்ந்த தோளாய்! கூறுவல் என்று கூறும்.

பொருள் · Meaning in Tamil

என்றலும் இரங்கி ஐயன் - என்று வருணன் கூறக் கேட்டதும் இராமபிரான் இரக்கம் கொண்டு வருணனை நோக்கி; இத்திறம் நிற்க - இது இவ்வாறு இருக்கட்டும் (இனி நடப்பதைப் பார்ப்போம்); இந்தப் பொன்றல் இல்பகழிக்கு - வில்லில் பூட்டிய இந்த அழிவில்லாத அம்புக்கு (வீணாகப் போகாமல்); அப்பால் இலக்கம் என் புகறி என்ன - இலக்கு யாதென்று கூறுவாயாக என்று வினவ; நன்று என வருணன் தானும் - நல்லது என்று வருணனும் ராமனை நோக்கி; குன்றென உயர்ந்த தோளாய் - மலை போன்ற உயர்ந்த தோள்களை உடைய பெருமானே; உலகத்து நலிவு தீர - இவ்வுலகத்தின் துன்பமெல்லாம் தீரும்படி; கூறுவல் என்று கூறும் - அம்புக்கு இலக்கம் யாதெனக் கூறுவேன் என்று சொல்லலானான்.

பொன்றுதல் - அழிதல். வருணன் மீது எய்வதற்கு வில்லில் பூட்டிய அம்பு வீணாகக் கூடாது. வருணன் 'அபயம்' என்று கூறிச் சரணடைந்து விட்டான் எனவே அம்புக்கு வேறு இலக்கு ஏதேனும் வேண்டும். பொன்றுதலில்லா அம்பு அல்லவா? பரசுராமனிடம் வில்லை வாங்கி அம்பு பூட்டி இலக்கம் கேட்டது போல (1298) 'பகழிக்கு அப்பால் இலக்கம் என்' என்று இராமபிரான் கேட்க, உலகத்தின் துன்பம் தீர, கூறுவேன் என்று கூறலானான். உலகத்தை நலிவு செய்து கொண்டிருந்த அரக்கர்கள் இராமனது அம்பால் அழிவர் என்பதால் "உலகத்து நலிவு தீர" என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he said this, the Lord, moved to pity, said, 'Let that be; for this
  2. unfailing arrow, what target is there beyond? Tell me.'
  3. 'Good,' said Varuṇaṉ, 'so that the world's suffering may end,
  4. O you with shoulders tall as mountains, I shall tell you,' and he spoke.

What the poem says

Rāmaṉ, moved, lets the matter rest. But the Piramāstiram is already fitted to his bow, and such an arrow must never be wasted. Now that Varuṇaṉ has surrendered, it needs another target. Rāmaṉ asks for one, just as he once asked Paracurāmaṉ for a target for the arrow fitted to the bow taken from him. Varuṇaṉ agrees, and offers one whose destruction will relieve the world's suffering.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟalum, iraṅki, aiyaṉ, 'it tiṟam niṟka intap
poṉṟal il pakaḻikku appāl ilakkam eṉ? pukaṟi' eṉṉa
'naṉṟu' eṉa varuṇaṉtāṉum, 'ulakattu nalivu tara,
kuṉṟu eṉa uyarnta tōḷāy! kūṟuval' eṉṟu kūṟum.