கம்பராமாயணம் 6710 · யுத்த 6.78

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மன்னவ - உலகனைத்துக்கும் மன்னனாக விளங்குபவனே; மருகாந்தாரம் என்பதோர் தீவில் வாழ்வார் - மருகாந்தாரம் என்ற பெயர் கொண்ட கடல் நடுவே உள்ள தீவில் வாழ்பவர்கள்; அன்னவர் சத கோடிக்கு மேல் உளர் - அத்தகையோர் நூறு கோடிக்கு மேற்பட்ட எண்ணிக்கையினராக உள்ளனர்; அவுணர் ஆயோர் தின்னவே உலகமெல்லாம் தீந்தன - அரக்கர்களான அவர்கள் தின்பதால் உலகமெல்லாம் அழிந்து போயிற்று; எனக்கும் தீயார் - அவ்வரக்கர்கள் எனக்கும் தீங்கு செய்யும் தீயவர்கள்; மின் உமிழ் கணையை - மின்னலைப் போல ஒளியை உமிழும் இந்த அம்பை; வெய்யோர் மேற்செல விடுதி என்றான் - அந்தக் கொடியவர்கள் மேல் செல்லுமாறு விடுவாயாக என்றான்.

'உலகம்' இடவாகு பெயராக உலக மக்களை உணர்த்தியது. அரக்கர் தின்பதற்கு உரியது அவ்வுயிர்களின் உடல்களேயாம். தீயும் என்பது உறுதியாதலால் 'தீந்தது' என்று கூறினான் என்க; (கால, வழுவமைதி) தன்னை அடைக்கலமடைந்த வருணனுக்குத் தீயோர்தனக்கும் தீயோர் என்பது இராமனது கொள்கையாதலின் 'எனக்கும் தீயோர்' என்றான். அவுணர் - அசுரர் சதம் - நூறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'O King! Those who live on an island called Marukāntāram,
  2. more than a hundred crores of them, who are Avuṇars,
  3. have devoured until the whole world is ruined; they are evil to me as well;
  4. send your lightning-spitting arrow against those cruel ones,' he said.

What the poem says

Varuṇaṉ names the target: more than a hundred crores of Avuṇars living on an island in the sea called Marukāntāram. They prey on the peoples of the world and harass Varuṇaṉ too. Since Rāmaṉ holds that the enemies of one who has taken refuge with him are his own enemies, Varuṇaṉ points out that they are 'evil to me as well'. He asks Rāmaṉ to loose the arrow against them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'maṉṉava! marukāntāram eṉpatu ōr tīviṉ vāḻvār,
aṉṉavar catakōṭikkum mēl uḷar, avuṇar āyōr,
tiṉṉavē ulakam ellām tīntaṉa; eṉakkum tīyār;
miṉ umiḻ kaṇaiyai veyyōrmēl cela viṭuti' eṉṟāṉ.