கம்பராமாயணம் 6711 · யுத்த 6.79

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நேடிநூல் தெரிந்துளோர் தம் - நல்ல ஞான நூல்களைத் தேடி, ஆராய்ந்து கற்றுத் தெளிந்த அறிவுடைய ஞானிகளது; உணர்விற்கும் நிமிர நின்றான் - ஞான உணர்வுக்கும் எட்டாது உயர்ந்து விளங்குபவனான இராமபிரான்; கோடி நூறு ஆயதீய அவுணரை - (தனது அம்பினை நோக்கி) நூறு கோடியினரான கொடிய அரக்கர்களை; குலங்களோடும் ஓடி நூறு என்று விட்டான் - அவர்களது குலங்களோடும் ஓடிச் சென்று அழிப்பாயாக என்று கூறி எய்தான்; ஓர் இமை ஒடுங்கா முன்னம் - ஒரு இமைப்பொழுது ஆவதற்கு முன்பே; அப் பகழித் தெய்வம் - அந்த அம்பாகிய தெய்வம்; பாடி நூறாக நூறி மீண்டது - அவ்வரக்கரூர் தூளாகும்படி அழித்துவிட்டு மீண்டு வந்தது.

நேடுதல் - ஆராய்தல். நூல் - ஞான நூல். நிமிர - உயர்ந்து, ஞானிகளின் உணர்வுக்கு எட்டாதவன் "எங்கள் நான் மறைக்கும் தேவர் அறிவுக்கும் பிறர்க்கும் எட்டாச் செங்கண் மால்" (417) என்று முன்பும் கூறுவது கருதத்தக்கது. 'உணர்ந்துணர்ந்துணரிலும் இறைநிலை உணர்வரிது' (1.3.6) என்ற திருவாய்மொழியும் நினைவு கூரலாம். 'கற்றவர் கற்றவர் உணர்வு காண்கிலாக் கொற்றவன்' (56) எனவும் கம்பரே முன்னரும் கூறியுள்ளார். நூறு - அழித்திடு. இமை ஒடுங்கா முன்னம் - கண்ணை இமைத்து முடிப்பதற்குள். பிரமாத்திரம் ஆதலாலும் தீயோரை நூறிட எடுத்த அவதாரப் பெருமானுக்கு உரியது ஆதலாலும் அம்பினைப் பகழித் தெய்வம் என்றார். பாடி - ஊர்; இங்கு மருகாந்தாரம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He who stands beyond even the understanding of those who have searched and mastered the books
  2. loosed it, saying, 'Run and destroy, with all their clans, the evil Avuṇars
  3. who number a hundred crores'; and before an eyelid could close,
  4. that divine arrow smashed their settlement to a hundred pieces and returned.

What the poem says

Rāmaṉ, the Lord whom even sages learned in all the scriptures cannot fully grasp, releases the arrow with the command to destroy the hundred crores of Avuṇars and all their kin. Faster than the blink of an eye, the arrow, called a 'divine arrow' because it is Piramaṉ's own weapon in the hand of the avatar, reduces their island city to dust and comes back to him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nēṭi nūl terintuḷōrtam uṇarviṟkum, nimira niṉṟāṉ,
'kōṭi nūṟu āya tīya avuṇaraik kulaṅkaḷōṭum
ōṭi nūṟu' eṉṟu viṭṭāṉ; ōr imai oṭuṅkā muṉṉam
pāṭi nūṟāka nūṟi mīṇṭatu ap pakaḻit teyvam.