கம்பராமாயணம் 6906 · யுத்த 10.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நெய்த்து இருண்டு உயரும் - பளபளத்துக் கருமை நிறத்தோடு உயர்ந்தோங்கியுள்ள; நீள் வரை மீதில் - மீண்டும் கிடக்கும் மலைமீதில்; தத்தி வீழ் அருவியின் திரள்சால - தவழ்ந்து வீழ்கின்ற அருவியின் தொகுதி போல; கைதரும் கவரி வீசிய காலால் - கைகளால் வீசப்படும் கவரிகளால் எழும் காற்றின் விசையில்; நெடுமார்பில் - இராவணனின் நெடிய மார்பில்; உத்தரீகம் உலாவ - மேலாடை அசைந்து விளங்க...
உத்தரீகத்துக்கு அருவி ஒப்பு. 'வேறுபல் துகிலின் நுடங்கி... இழுமென இழிதரும் அருவி.” (திருமுரு. 295-316) "அவிர்துகில் புரையும் அவ்வெள் அருவி" (குறிஞ்சிப். 55) "ஓயா அருவித்திரள் உத்தரீயத்தை ஒப்ப” (4780) மலைக்கு இராவணன் மார்பும், அருவிக்கு அவன் மேலாடையும் ஒப்பாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the wind from the fly-whisks waving in many hands,
- as on a long mountain that rises glossy and dark
- a mass of waterfall leaps and tumbles, so
- the upper cloth played upon his broad chest.
What the poem says
Attendants wave yak-tail fly-whisks around Irāvaṇaṉ, and the breeze makes the cloth draped over his chest ripple. His dark, massive chest is a mountain and the white rippling cloth is a waterfall pouring down it.
The comparison of a waterfall to a hanging cloth is an old one in Tamil poetry, found in Sangam works and elsewhere in the epic.