கம்பராமாயணம் 6907 · யுத்த 10.6

Section யுத்த காண்டம் / 10. இராவணன் வானரத் தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வானகத்து அமுது உருப்பசி வாசத்
தேன் அகத் திரு திலோத்தமை செவ்வாய்
மேனகைக் குயிலின் மென்மையர் யாரும்
சானகிக்கு அழகு உகுத்து அயல் சார.

பொருள் · Meaning in Tamil

வானகத்தினில் உருப்பசி - வானகத்திற்குரிய ஊர்வசியும்; வாசத் தேன் அகத்திரு திலோத்தமை - மணம் மிக்க தேனுடைய தாமரை மலரில் வாழும் திருமகள் போன்ற திலோத்தமையும்; செவ்வாய் மேனகை - சிவந்த வாயினளான மேனகையும்; குல அரம்பையர் - குலத்திற் சிறந்த அரம்பையும்; யாரும் - அவர் போன்ற தேவ மாதர் அனைவரும்; சானகிக்கு - சீதாதேவிக்கு; அழகு தந்து - (மேலும்) அழகு தருவதற்காக; அயல் சார - (இராவணன்) அருகே சார்ந்து நிற்கவும்.

தந்து - தர. எச்சத்திரிபு. இராவணனின் புறத்தே நின்ற ஊர்வசி, திலோத்தமை முதலிய தேவமாதர்கள் இராவணன் அகத்தே நின்ற சீதா தேவியின் அழகை உயர்த்திக்காட்ட உதவினர் என்பது கவிஞர் குறிப்பு. "அரம்பையர் குழாம் புடைசுற்ற” எனக் காட்சிப் படலத்தின் பாடலை (5147) இங்கு நினைவு கூர்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Uruppaci of the heavens, and, like the lady of the fragrant
  2. honeyed lotus, fair Tilōttamai, and red-lipped
  3. Mēṉakai, and noble Arampai, and all the others,
  4. stood close beside him, adding to Cāṉaki's beauty.

What the poem says

The celestial dancers Urvaśī (Uruppaci), Tilōttamā, Mēṉakā and Rambhā, who are captives at Irāvaṇaṉ's court, stand around him.

The poet adds a twist. These famous beauties stand outside him, while Cītai (Cāṉaki, daughter of Janaka) lives inside his heart. Their presence only makes him think of how much more beautiful she is. So they serve, in effect, to enhance her beauty.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāṉakattiṉil uruppaci vācat
tēṉ akat tiru tilōttamai cev vāy
mēṉakaik kula arampaiyar yārum
cāṉakikku aḻaku tantu ayal cāra.