கம்பராமாயணம் 7 · பால 1.7

Section பால காண்டம் / 1. ஆற்றுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மணியும் பொன்னும் மயில் தழைப் பீலியும்
அணியும் ஆனை வெண் கோடும் அகிலும் தன்
இணை இல் ஆரமும் இன்ன கொண்டு ஏகலான்
வணிக மாக்களை ஒத்தது வாரியே.

பொருள் · Meaning in Tamil

மணியும் பொன்னும் மயில்தழைப் பீலியும் - முத்துக்கள் பொன், மயில் இறகுகள்; அணியும் ஆனை வெண்கோடும் - அழகுடைய யானைத் தந்தங்கள்; தன் இணை இல் ஆரமும் - தனக்கு ஒப்பு இல்லாத சந்தன மரம்; இன்ன கொண்டு ஏகலான் - ஆகிய இத்தகையவற்றை வாரிச் செல்லுதலால்; அவ்வாரி - சரயுவின் அந்த வெள்ளம்; வணிக மாக்களை ஒத்தது - வர்த்தகர்களை ஒத்திருந்தது.

தழைப் பீலி - இருபெயரொட்டுப் பண்புத் தொகை. 'மணி'யை முத்து எனப் பொருள் கொண்டதால், ஆரம் சந்தன மரமெனப் பொருள் கொள்ளப்பட்டது. ஆரம் - முத்து, சந்தனம், மாலை எனப் பல பொருள் கொண்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Gems and gold and the spreading plumes of peacocks,
  2. fine white elephant tusks, and aloe wood, and
  3. peerless sandalwood: since it carried such things away,
  4. that flood was like a company of merchants.

What the poem says

The flood is now compared to merchants. As it pours down from the mountains, it carries off pearls, gold, peacock feathers, ivory, aloe wood and sandalwood, the very goods traders carry from place to place.

The word for the last item can mean pearl, sandalwood or garland. Since the first item has already been taken as pearls, it is read here as sandalwood.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṇiyum poṉṉum mayil taḻaip pīliyum
aṇiyum āṉai veṇkōṭum akilum taṉ
iṇai il āramum iṉṉa koṇṭu ēkalāṉ
vaṇika mākkaḷai ottatu av vāriyē.