கம்பராமாயணம் 8 · பால 1.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அவ் வாரி - அந்த வெள்ளப் பெருக்கு; பூ நிரைத்தும் - பல நிற மலர்களை வரிசைப்படுத்தியும், மென் தாது பொருந்தியும் - மென்மையான மகரந்தப் பொடி பொருந்தப் பெற்றும்; தேன் அளாவியும் - தேனொடு கலந்தும்; செம்பொன் விராவியும் - செம்பொன் கலந்தும்; ஆற்றொடு - ஆற்றிலே; ஆனை மா மதம் அளாவியும் - ஆனைகளின் மிகுந்த மதநீர் கலந்தும்; வானவில்லை நிகர்த்தது - பலநிறங்கள் கொண்ட வானவில்லை ஒத்திருந்தது.
பல நிறங்கள் கொண்ட பொருள்கள் ஆற்று வெள்ளத்தில் கலந்திருந்த காட்சி வானவில்லைக் கண்டதுபோல் இருந்தது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Lined with rows of flowers, joined with soft pollen,
- mingled with honey, blended with red gold,
- mixed with the great streams of the elephants' musth,
- that flood was like the rainbow.
What the poem says
Here the flood is likened to a rainbow. Its waters carry flowers of many colours, golden pollen, honey, specks of red gold and the dark musth that flows from the temples of elephants in rut. All these streak the water with bands of colour, so that the river looks like a rainbow across the land.