கம்பராமாயணம் 7014 · யுத்த 12.27

Section யுத்த காண்டம் / 12. அணி வகுப்புப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அப்பதகன் மூதூர் - அந்தப் பாதகனான இராவணனின் தொல்நகரமாகிய இலங்கை; கடல் நூல் புலவராலும் - கடல் போன்ற நூல்களைக் கற்ற புலமை நிறைந்தோராலும்; நுனிப்ப - நுண்ணிதின் உணர; அரும் வலத்தது ஆய - இயலாத வலிமை வாய்ந்ததாகிய; கடல் வேல் தானை ஆன - கடல் போன்று வேல் ஏந்திய படைத்தொகுதியான அரக்கர் சேனை ஆன; விரி கடல் விழுங்கிற்றேனும் - விரிந்த சமுத்திரத்தால் விழுங்கப் பெற்றிருந்தது ஆனாலும்; கார்க்கடல் புறத்தது ஆக - கரிய கடல் பக்கத்தே சுற்றி நிற்க; கவிக்கடல் வளைந்த காட்சி - வானரப் படையெனும் கடல் வளைத்து நிற்கும் காட்சியானது; பாற்கடல் அழுவத்து உள்ளது - பாற்கடற்பரப்பின் உள்ளே உள்ளது; ஒத்தது - (ஒரு நகரம்) போன்றிருந்தது.

குரங்குச் சேனை பாற்கடலாகவும், அது சுற்றியுள்ள பெரிய அரக்கர் சேனை கருங்கடலாகவும் உருவகிக்கப்பட்டன. அழுவம் - பரப்பு. பதகன் - பாதகன் - கொடும்பாவம் புரிந்தவன். பதகன் துரந்த உரகம் (கம்ப. 8264) "வெய்யன் பதகன் பரதார விருப்பன் வீணன்" (அரிச் 4. இந்திர. 35)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Of a might that even scholars versed in an ocean of books could not fathom,
  2. the wide sea that was the spear-ocean of troops had swallowed it; and yet,
  3. with the dark sea lying outside, the sight of the ocean of monkeys ringing it round
  4. made that sinner's ancient city look like a place set in the expanse of the milk ocean.

What the poem says

Seen from above, Ilaṅkai lies at the centre of rings of "seas." Around it is the ocean of demon troops. Around them is the ocean of monkeys, and around everything is the real dark sea.

The poet compares the whole sight to a city floating in the milk ocean of myth, with the monkey host in the role of the milky sea. Patakaṉ means a great sinner, here Irāvaṇaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nūṟ kaṭal pulavarālum nuṉippa arum valattatu āya
vēṟ kaṭal tāṉai āṉa viri kaṭal viḻuṅkiṟṟēṉum
kārk kaṭal puṟattatu āka, kavik kaṭal vaḷainta kāṭci,
pāṟkaṭal aḻuvattu uḷḷatu ottatu, ap patakaṉ mūtūr.