கம்பராமாயணம் 7013 · யுத்த 12.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தந்திரம் - வானரப் படையானது; இலங்கை மூதூர் - இலங்கையாகிய தொல் நகரின்; மதிலினைத் தழுவி தாவி - மதிலினை நெருங்கிப் பாய்ந்தவாறு; அந்தரக் குலமீன் சிந்த - வானத்து நட்சத்திரங்கள் மண்ணில் விழுமாறு; அண்டமும் கிழிய - அண்ட கோளம் கிழிந்து விடுமாறும்; ஆர்ப்ப - ஆரவார முழக்கம் இட; தனிச்செஞ்சுடரோன் சேயும் - ஒப்பற்ற சிவந்த கிரணங்களையுடைய கதிரவன் புதல்வனாகிய சுக்கிரீவனும்; தம்பியும் - இலக்குவனும்; முன்பு செல்ல - முன்னே செல்ல; இந்திரன் தொழுது வாழ்த்த - (வானில்) இந்திரன் வணங்கி வாழ்த்தா நிற்க; இராமனும் எழுந்து சென்றான் - இராமபிரானும் (போர்க்களத்தை நோக்கி) எழுந்து வந்தான். தந்திரம் - படை வடசொல். "தந்திரக்கடலை நீத்தி" (கம்ப. 7340) என்பர் மேலும். கதிரவனே நிலா முதலியவற்றிற்கு ஒளி வழங்குபவன் ஆதலின், "தனிச்செஞ்சுடரோன்" எனப்பட்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The army pressed up to the wall of Ilaṅkai's ancient city and leapt at it,
- roaring so that the clustered stars of the sky came scattering down and the cosmic shell split;
- with the son of the peerless red-rayed Sun and his own younger brother going before,
- while Intiraṉ bowed and blessed him, Irāmaṉ too rose and went forth.
What the poem says
The monkey army surges against the walls with a roar that seems to shake the stars loose and split the universe. Cukkirīvaṉ, son of the Sun, and Ilakkuvaṉ lead the way, and Irāmaṉ follows while Intiraṉ, king of the gods, bows and blesses him from the sky.
The Sun is called the "peerless" light because it lends its light even to the moon.