கம்பராமாயணம் 7045 · யுத்த 13.30

Section யுத்த காண்டம் / 13. அங்கதன் தூதுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘அடுவனே ‘என்னப் பொங்கி ஓங்கிய அரக்கன், அந்தோ!
தொடுவனே, குரங்கைச் சீறிச் சுடர்ப் படை? ‘என்று தோன்ற,
‘நடுவனே செய்யத்தக்க நாள் உலந்தாற்குத் தூத!
படுவதே துணிந்தாய் ஆயின், வந்தது பகர்தி ‘என்றான்.

பொருள் · Meaning in Tamil

அடுவனே என்னப் பொங்கி - (இவனைக்) கொல்லவே போகிறேன் என்று வெகுண்டு; ஓங்கிய அரக்கன் - எழுந்த இராவணன்; அந்தோ! - ஐயோ! குரங்கைச் சீறி சுடர்ப்படை தொடுவெனே - (ஓர் அற்பக்) குரங்கின் மேல் கோபித்து வாளைத் தீண்டுவேனோ; என்று - என்றெண்ணி; தோன்றா நடுவனே செய்யத்தக்க - கட்புலனாகாத இயமனே இறுதி செய்யக்கூடிய; நாள் உலந்தோர்க்குத் தூத! - வாழ்நாள் முடிவெய்தியவர்கட்குத் தூதனாக வந்தவனே! படுவதே துணிந்தாய் ஆகில் - (அந்த இராம இலக்குவர்களோடு) நீயும் அழிவது என்று முடிவு செய்து விட்டாயாகில்; வந்தது பகர்தி என்றான் - நீ வந்த காரியத்தை உரைப்பாயாக என்றான் (இராவணன்)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "I will kill him!" Seething, the demon rose up; then, "Alas,
  2. shall I raise my blazing weapon in anger against a monkey?" he thought, and said,
  3. "Envoy of those whose days are spent, whom the unseen Judge must now deal with!
  4. If you are resolved to die, then say what you have come to say."

What the poem says

Irāvaṇaṉ jumps up, ready to kill Aṅkataṉ, then holds back: it would be beneath him to draw his sword on a monkey. He sneers that Aṅkataṉ speaks for men whose lives are over, men whom Yama, the unseen and impartial judge, is about to take. If Aṅkataṉ wants to share their fate, let him deliver his message.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘aṭuveṉē ‘eṉṉap poṅki ōṅkiya arakkaṉ, antō!
toṭuveṉē, kuraṅkaic cīṟic cuṭarp paṭai? ‘eṉṟu tōṉṟā,
‘naṭuvaṉē ceyyattakka nāḷ ulantārkkut tūta!
paṭuvatē tuṇintāyākil, vantatu pakarti ‘eṉṟāṉ.