கம்பராமாயணம் 7047 · யுத்த 13.32

Section யுத்த காண்டம் / 13. அங்கதன் தூதுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1“‘பருந்து உணப் பாட்டி யாக்கை படுத்த நாள், படைஞரோடும்
மருந்தினும் இனிய மாமன் மடிந்த நாள், வனத்துள் வைகி
இருந்துழி வந்த தங்கை இரும் செவி முலையும் மூக்கும்
அரிந்த நாள், வந்திலாதான் இனிச் செய்யும் ஆண்மை உண்டோ?

பொருள் · Meaning in Tamil

பாட்டியாக்கை - பாட்டியாகிய தாடகையின் உடலை; பருந்து உண்ணப் படுத்தநாள் - பருந்துகள் தின்னும்படி கொன்ற நாளிலும்; மருந்தினும் இனிய மாமன் மடிந்த நாள் - அமிழ்தினும் இனியவனான தன் மாமன் சுபாகு (வீரரோடும்) இறந்து பட்ட நாளிலும்; வனத்துள் வைகி இருந்துழி - காட்டில் (பஞ்ச வடியில்) வாழ்ந்த காலத்தில்; வந்த நங்கை - அங்கு வந்த சூர்ப்பணகையின்; இருஞ்செவி முலையும் மூக்கும் - பெரிய காதுகளையும் மார்புகளையும் மூக்கையும்; அரிந்துழி - (இலக்குவன்) அரிந்து போட்ட நாளிலும்; வந்திலாதான் - போருக்கு வாராதவன்; இனிச் செய்யும் ஆண்மை உண்டோ? - இப்போது போரிட வந்து வீரம் காட்டுவது உண்டோ? (இல்லை)

பாட்டி - தாடகை. மாமன் - சுபாகு. தாடகையின் மகன், மாரீசனின் சகோதரன். துயர்க்காலத்தே மருந்து போன்று வந்து தாயுடன் பிறந்த மாமன் உதவுவது இந்நாட்டுப் பண்பாதலால், "மருந்தினும் இனிய மாமன்" என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "On the day his grandmother's body was felled for kites to eat; on the day, with his soldiers,
  2. his uncle, sweeter than healing nectar, perished; when we were dwelling in the forest
  3. and the lady who came had her large ears, her breasts and her nose
  4. cut off, he did not come; what manliness will he show now?"

What the poem says

The rest of the message lists the times Irāvaṇaṉ did nothing. Irāmaṉ killed the demoness Tāṭakai, whom Aṅkataṉ calls his grandmother, and left her body for the kites. Her son Cupāku, Irāvaṇaṉ's uncle, died with his warriors. Cūrppaṇakai had her ears, breasts and nose cut off in the forest. Irāvaṇaṉ did not come to fight on any of those occasions, so why would he now?

In Tamil custom a mother's brother is the one who comes to help in trouble, like medicine, which is why the uncle is called "sweeter than healing nectar."

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1“‘paruntu uṇap pāṭṭi yākkai paṭutta nāḷ, paṭaiñarōṭum
maruntiṉum iṉiya māmaṉ maṭinta nāḷ, vaṉattuḷ vaiki
iruntuḻi vanta naṅkai iruñcevi mulaiyum mūkkum
arintuḻi, vantilātāṉ iṉic ceyyum āṇmai uṇṭō?