கம்பராமாயணம் 7048 · யுத்த 13.33

Section யுத்த காண்டம் / 13. அங்கதன் தூதுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1“‘கிளையொடும் படைஞரோடும். கேடு இலா உயிர்கட்கு எல்லாம்
களை அன தம்பிமாரை வேரொடும் களையக் கண்டும்,
இளையவன் பிரிய மாயம் இயற்றி, ஆயிழையை வௌவும்
வளை எயிற்று அரக்கன், வெம்போர்க்கு, இனி எதிர் வருவது உண்டோ?

பொருள் · Meaning in Tamil

கேடு இலா உயிர்கட்கு எல்லாம் - அழிவற்ற உலகத்து உயிர்களாகியவெல்லாம் (அழிப்பதற்கு); களை என - இவர்கள் களையாக உள்ளனர் என்று; தம்பிமாரைக் கிளையொடும் படைஞரோடும் - (கரன் முதலிய) தம்பியரைச் சுற்றத்தாரோடும்; சேனை வீரர்களோடும்; வேரொடும் களையக் கண்டும் - அடி முதலோடு அழித்துவிட்டதை அறிந்திருந்தும்; இளையவன் பிரிய - (நேரே வந்து போரிடும் துணிச்சலின்றி) என்னைவிட்டு இளையவன் பிரியுமாறு; மாயம் இயற்றி - வஞ்சனைச் செயல் புரிந்து, (அவன் அகன்ற சமயத்தில்); ஆயிழையை வௌவும் - சீதா தேவியைக் கவர்ந்து வந்த; வளை எயிற்று அரக்கன் - வளைந்த கோரப் பற்களையுடைய அந்த இராவணன்; வெம்போர்க்கு - கொடிய யுத்தத்திற்கு; இனி எதிர் வருவது உண்டோ? - இனி மேல் எதிர்த்துச் சண்டையிட வருவது ஏது?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Even after seeing his younger brothers, with their kin and their soldiers,
  2. torn out root and all, as weeds among all living things that should not perish,
  3. he worked a trick to draw my younger brother away and stole the bejewelled lady:
  4. will that curve-fanged demon ever come out now to face fierce battle?"

What the poem says

Irāmaṉ's message goes on. Irāvaṇaṉ's younger brothers, Karaṉ and the others, were wiped out with all their kin and troops, weeded out like a pest among living things. Even then Irāvaṇaṉ did not come to fight. He used a trick to lure Ilakkuvaṉ away and carried Cītai off by stealth. How can such a coward be expected to face battle now?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1“‘kiḷaiyoṭum paṭaiñarōṭum. kēṭu ilā uyirkaṭku ellām
kaḷai eṉa tampimārai vēroṭum kaḷaiyak kaṇṭum,
iḷaiyavaṉ piriya māyam iyaṟṟi, āyiḻaiyai vauvum
vaḷai eyiṟṟu arakkaṉ, vem pōrkku, iṉi etir varuvatu uṇṭō?