கம்பராமாயணம் 7049 · யுத்த 13.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஏந்திழை தன்னைக் கண்ணுற்று - (அனுமன்) சீதா தேவியைச் சந்தித்து; எதிர்ந்தவர்தம்மை எற்றி - அப்போது தன்னை எதிர்த்த (அத்தனை) வீரர்களையும் தாக்கி ஒழித்து; புதல்வன் தன்னை - அட்சய குமாரனை; சாந்து என - (குழைத்த) சாந்து போல் ஆகுமாறு; தரையிடைத் தேய்த்து - மண்ணில் இட்டுத் தேய்த்து; தானும் காணவே - தன் கண் முன்பே; தன் ஊர் - தனது இலங்கை மாநகரை; காந்து எரி மடுத்து - எரியும் நெருப்பிற்கு இரையாக்கி; கடலைத் தாவிப் போந்த பின் - கடலைத் தாண்டி வந்து அடைந்த பின்னரும்; வந்திலாதான் - (போருக்கு) வந்தடையாத இராவணன்; இனிப் பொரும் போரும் உண்டோ? - இனி மேல் செய்யப் போகின்ற போரும் உண்டோ?
சந்தனக் குழம்பு போல் தரையில் தேய்க்கப்பட்டவன் இராவணன் மகனான, அக்ககுமாரன். (5705)
ஆங்கிலம் · English translationAI
Translation
- "After one saw the bejewelled lady, struck down all who opposed him,
- ground his son into the earth like sandal paste, and set his city
- ablaze with fire as he himself looked on, then leapt back across the sea
- and went home: he did not come then; is there any battle he will fight now?"
What the poem says
Next comes Aṉumaṉ's raid. He found Cītai, killed every warrior sent against him, and ground Irāvaṇaṉ's son Akkakumāraṉ into the ground like sandal paste. He set the city on fire before Irāvaṇaṉ's own eyes and leapt back over the sea. Even then Irāvaṇaṉ did not come out to fight.