கம்பராமாயணம் 7050 · யுத்த 13.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தொழாத கொற்றக் குடைத் தொழில் - (தன்னைப் பிறர் தொழுவது அல்லாமல் தான் பிறரைத்) தொழ வேண்டாத இலங்கை ஆட்சியை; உம்பி கொள்ளக் கொடுத்துழி - உன் தம்பி வீடணன் பெறக் கொடுத்த போதும்; வருணன் வந்து தொழுதுழி - விட்ட கணைக்கு ஆற்றாது வருணன் வந்து சரணம் அடைந்த போதும்; வேலை கோலி அடைத்துழி - கடலை வளைத்துச் சேது சமைத்த போதும்; குலத்து உடை ஒற்றர் தம் பால் - அரக்கர் குலத்தில் தோன்றிய ஒற்றர்களுக்கு; உயிர் கொடுத்து - உயிர்ப் பிச்சையளித்து; உள்ளக் கள்ளம் துடைத்துழி - அவர்களின் நெஞ்சத்திலிருந்த வஞ்சனையை அகற்றி அனுப்பிய போதும்; வந்திலாதான் - வாராதிருந்தவன்; இனி வர - இனி மேல் வருவான் என்று நினைக்கும்; ஐயம் உண்டோ? - ஐயப்பாட்டிற்கு இடம் உண்டோ? (இல்லை)
ஒற்றர்களுக்கு உயிர்ப் பிச்சையளித்ததும், அவர்கள் தம் உள்ளத்து வஞ்சம் மாறி, இராவணனிடத்தே இராமன் புகழ் உரைத்ததும் ஒற்றுக் கேள்விப்படலத்துள் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "When spies of his own race were given their lives and the deceit in their hearts
- wiped clean; when Varuṇaṉ came and bowed; when the conquering umbrella's rule,
- that bows to none, was given to your younger brother; when the sea was spanned
- and dammed: he did not come; will he come to battle now?"
What the poem says
The list ends with recent events. Irāmaṉ spared the demon spies who were caught in his camp, and they went home changed men and praised him to Irāvaṇaṉ. Varuṇaṉ, god of the sea, came and surrendered when Irāmaṉ aimed his arrow at the ocean. The sovereignty of Ilaṅkai, which bows to no one, was given to Vīṭaṇaṉ, and a causeway was built across the sea. Through all of it Irāvaṇaṉ never came out to fight.