கம்பராமாயணம் 7051 · யுத்த 13.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மறிப்புண்ட தேவர் காண - (தன்னால் சிறையில்) அடைபட்ட தேவர்கள் எல்லாம் கண்டு கொண்டிருக்க; மணி வரைத்தோளின் வைகும் - அழகிய மலை போன்ற தோள்களில் தங்கும்; நெறிப்புண்டரீகம் அன்ன முகத்தியர் முன்னே - (மலரும்) ஒழுங்கினையுடைய தாமரை மலர் போன்ற முகங்களையுடைய தேவ மங்கையர்க்கு முன்பாக; நென்னல் - நேற்று; பொறிப்புண்டரீகம் போலும் ஒருவனால் - வரிகளையுடைய புலியினைப் போன்ற சுக்கிரீவனால்; புனைந்த மௌலி - தான் அணிந்திருந்த மகுட மணிகள்; பறிப்புண்டும் - பறிக்கப்பட்ட போதும்; வந்திலாதான் - போர் புரிய வாராத இராவணன்; இனிப் பொரும்பான்மை உண்டோ? - (இனி வெளிப்போந்து) போர்புரியும் தன்மை உள்ளவனோ? (இல்லை)
ஆங்கிலம் · English translationAI
Translation
- "With the captive gods looking on, and before the women who rest on his jewelled mountain shoulders,
- whose faces are like lotuses in their rows, yesterday,
- at the hands of one like a striped tiger, the crowns he wore
- were stripped of their gems, and he did not come; has he any mind to fight now?"
What the poem says
The last and freshest humiliation: only yesterday Cukkirīvaṉ, fierce as a striped tiger, tore the gems from Irāvaṇaṉ's crowns. The captive gods saw it, and so did the lotus-faced women who cling to his mountainous shoulders. If even that did not bring him out to fight, he never will.