கம்பராமாயணம் 707 · பால 10.155

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஊழி பெயர்ந்தென - யுகமே கழிந்தாற் போல; கங்குல் - இரவுக் காலமானது; ஒரு வண்ணம் - ஒருவாறு; புடை பெயர - (தன்) நிலையிலிருந்து நீங்க; உறக்கம் நீத்த - (இராமன்) தூக்கத்தை விட்டு எழுந்த; சூழி யானையின் - முகபடாமுள்ள யானை போல; எழுந்து - துயில் நீங்கி எழுந்து; தொல் நியமத் துறை - பழமையான நித்தியக் கடன்களை; முடித்து - நிறைவேற்றி; சுருதி அன்ன மாதவன் - வேதத்தின் உருவம் போன்ற கோசிக முனிவனை; பணிந்து - வணங்கி (அவனொடும்); மனக்கு இனிய - (தன்) மனத்திற்கு இனிய; தம்பியொடும் - தம்பியான இலக்குவனுடனும்; வம்பின் மாலை தாழும் - மணங் கமழும் மாலை தாழ்ந்த; மா மணி மௌலி - சிறந்த மணி மகுடத்தையும்; தார் - குலத்திற்குரிய மாலையையும் அணிந்த; சனகன் - சனக மன்னனது; பெரு வேள்விச் சாலை - பெரிய யாக சாலையை அடைந்தான்.

'ஊழி பெயர்ந்தெனக் கங்குல் ஒரு வண்ணம் புடைபெயர' என்றதனால் காதல் வயப்பட்டவர்க்கு இரவு நீட்டித்து நிற்றல் விளக்கப்படுகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the night had somehow moved off, as if an age had passed, he rose
  2. like an elephant in its face-cloth that has shaken off sleep, completed the ancient daily rites,
  3. bowed to the blessed great ascetic who was like the Veda itself, and with his dear brother
  4. came to the great sacrificial hall of Caṉakaṉ, of the garland and the great jewelled crown hung with fragrant wreaths.

What the poem says

The night, which to the lovesick Irāmaṉ has felt as long as an age, finally passes. He rises like a caparisoned elephant shaking off sleep, performs his morning rites, pays his respects to Vicuvāmittiraṉ, and goes with Ilakkuvaṉ to King Caṉakaṉ's great sacrificial hall.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ūḻi peyarnteṉak kaṅkul oruvaṇṇam puṭai peyara, uṟakkam nītta
cūḻi yāṉaiyiṉ eḻuntu, tol niyamat tuṟai muṭittuc, curuti aṉṉa
vāḻi mātavaṟ paṇintu, maṉakku iṉiya tampiyoṭum, vampiṉ mālai
tāḻum mā maṇi maulit tārc caṉakaṉ peru vēḷvic cālai cārntāṉ.