கம்பராமாயணம் 706 · பால 10.154
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அங்கு - பாற்கடலில்; கொல் ஆழி - கொல்ல வல்ல சக்கரப் படையை; நீத்து - நீக்கிவிட்டு; ஓர் குனி வயிரச்சிலை - வளைந்து உறுதி வாய்ந்த ஒப்பற்ற கோதண்ட வில்லை; தடக் கைக் கொண்ட - பெரிய கையிலே கொண்டு எழுந்தருளிய; கொண்டல் - மேக நிறத்தவனான இராமன்; ஆயிரம் வாய் - ஆயிரம் முகங்களிலும்; மணி விளக்கம் அழலும் - மாணிக்கமான விளக்குகள் ஒளி செய்யப்பெற்ற; சேக்கை - (ஆதிசேடனாகிய) படுக்கையிலே; தொல் ஆழி - பழமையான பாற் கடலில்; துயிலாது - தூங்காமல் (இருந்து); துயர் ஆழி - (பாற்கடலில் பாம்பு அணையில் பள்ளிக் கொள்ளாமல் இராமனாக அவதரித்து) (சீதையைச் சேராமல் உண்டாகிய) மனத்துன்பமாகிய; நெடுங் கடலுள் - பெரிய கடலில்; துயில்கின்றான் - மயங்கிக் கிடக்கின்றான்; எல் ஆழித் தேர் - (அவனை) ஒளியுடைய ஒற்றைச் சக்கரத் தேரைக் கொண்ட; இரவி - சூரியன்; இளங்கரத்தால் - மெல்லிய கைகளால், அடி வருடி - (திருவடிகளை) இனிதாகத் தடவிக் கொடுத்து; அனந்தல் தீர்ப்ப - (அந்த இராமனின்) துயில் மயக்கத்தைத் தீர்க்க (அதனால்); அல் ஆழிக் கரை - இரவாகிய கடலின் எல்லையை; கண்டான் - பார்த்தான்.
பகலவன் உதித்து அவனுடைய கதிர்கள் வெளிப்பட்டு விளங்கிய அளவில் இராமன் துயில் உணர்ந்தான். உயர்ந்தோரைத் துயில் உணர்த்த வேண்டுபவர் தம் மெல்லிய கைகளால் அவர் திருவடிகளை வருடித் துயில் எழுப்புதல் முறையாகும். அதனால் 'இரவி இளங்கரத்தால் அடிவருடி அனந்தல் தீர்ப்ப' என்றார். கொண்டல் - உவமையாகு பெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The cloud-dark one who had laid aside the killing discus there and taken in his great hand a curved diamond-hard bow,
- as the sun of the bright one-wheeled chariot stroked his feet with young rays to rouse him from his drowsiness,
- saw the far shore of the sea of night — he who, not sleeping on the couch where jewel lamps burn
- in a thousand mouths upon the ancient ocean, lies sleeping in the long deep sea of sorrow.
What the poem says
Irāmaṉ, who is Viṣṇu, has set aside the discus he carries on the milk ocean and taken up a bow instead. He no longer sleeps on the thousand-headed serpent whose hoods glow with gems; instead he lies drowned in a sea of grief for Cītai.
The rising sun gently strokes his feet with its first rays, as a servant wakes a great man by massaging his feet, and so Irāmaṉ reaches the far shore of the ocean of night.