கம்பராமாயணம் 705 · பால 10.153

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எண் அரிய மறையினொடு கின்னரர்கள் இசை பாட, உலகம் ஏத்த,
விண்ணவரும் முனிவர்களும் வேதியரும் கரம் குவிப்ப, வேலை என்னும்
மண்ணும் அணி முழவு அதிர, வான்அரங்கின் நடம்புரி வாள், இரவி ஆன
கண் நுதல் வானவன், கனகச் சடை விரிந்தால் என, விரிந்த கதிர்கள் எல்லாம்.

பொருள் · Meaning in Tamil

எண் அரிய - அளத்தற்கு அரிய; மறையினொடு - வேதப் பாடல்களோடு; கின்னரர்கள் - கின்னரர்; இசைபாட - கானம் பாடவும்; உலகம் ஏத்த - உயர்ந்தவர் துதிக்கவும்; விண்ணவரும் - தேவர்களும்; முனிவர்களும் - முனிவர்களும்; வேதியரும் - அந்தணர்களும்; கரம்குவிப்ப - கை கூப்பி வணங்கவும்; வேலை என்னும் - கடல் என்கிற; மண்ணும் மணி முழவு - மார்ச்சனை பூசிய அழகிய மத்தளம்; அதிர - முழங்கவும், வான் அரங்கின் - வானமாகிய நடன சபையிலே; நடம் புரி - நடனம் ஆடுகின்ற; வாள் இரவி ஆன - ஒளி பொருந்திய சூரியனாகிய; கண் நுதல் வானவன் - நெருப்புக் கண்ணை நெற்றியிலே உடைய உருத்திர மூர்த்தியின்; கனகம் சடை - பொன்னிறமான சடைகள்; விரிந்தால் என - விரிந்தது போல; கதிர்கள் எல்லாம் - (செந்நிறமுள்ள) ஒளிக் கதிர்கள் யாவும்; விரிந்த - எங்கும் பரவின.

வானத்திலே சூரியனின் கதிர்கள் பரவுதல் வானத்தை அளாவி ஓங்கி உயர்ந்து சிவனது செஞ்சடை விரிதலை ஒத்துள்ளது என்றார் - தன்மைத் தற்குறிப்பேற்ற அணி. சிவனது நடனத்துக்கு மிருதங்க நாதம் போலக் கதிரவனின் நடனத்திற்குக் கடல்முழக்கம்; சிவனுக்கு அம்பலம் போலக் கதிரவனுக்கு அம்பரம். மண்: மத்தளத்திற்குத் தடவும் மாப்பசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the kinnaras sang with the countless Vedas, as the world praised,
  2. as the gods, the sages and the brahmins joined their hands, and as the sea,
  3. a fine drum smeared with paste, thundered, the god with the eye in his brow, become the bright sun,
  4. danced on the stage of the sky — and all the rays spread as if his golden locks had flown out.

What the poem says

The rising sun is pictured as Śiva performing his cosmic dance. The sky is his stage, the roaring sea is his tuned drum, the kinnaras sing with the Vedas, and gods, sages and brahmins stand with folded hands. The sun's rays fanning out across the sky are Śiva's golden matted locks flying loose as he dances.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṇṇa ariya maṟaiyiṉoṭu kiṉṉararkaḷ icai pāṭa, ulakam ētta,
viṇṇavarum muṉivarkaḷum vētiyarum karam kuvippa, vēlai eṉṉum
maṇṇum aṇi muḻavu atira, vāṉ araṅkil naṭampuri vāḷ, iravi āṉa
kaṇṇutal vāṉavaṉ, kaṉakac caṭai virintāleṉa, virinta katirkaḷ ellām.