கம்பராமாயணம் 704 · பால 10.152
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பண்டு - (தலைவியரைப் பிரிவதற்கு) முன்பு; வரும்குறி பகர்ந்து - தாம் மீண்டு வரும் காலத்தைக் குறிப்பிட்டுக் கூறி; பாசறையின் - போர் செய்யும் பொருட்டும்; பொருள் வயினின் - பொருள் தேடல் பொருட்டும்; பிரிந்துபோன - தலைவியரைப் பிரிந்து சென்ற; வண்டு தொடர் - வண்டுகள் இடைவிடாது மொய்ப்பதற்கு உரிய; நறுந் தெரியல் - மணமுள்ள பூமாலைகளையுடைய; உயிர் அனைய - உயிரையொத்த; கொழுநர் - தலைவர்; மணித் தேரோடும் வர - (குறித்த காலத்தில்) அழகிய தேரிலே மீண்டு வர; கண்டு - அதைப் பார்த்து; மனம் களி சிறப்ப - மனம் பெரிதும் பூரித்து; ஒளி சிறந்து - (தலைவரைப் பிரிந்த காலத்து மங்கியிருந்த) முகங்களின் பொலிவு மிகக் கூடி; மெலிவு அகலும் - தளர்வு நீங்கிய; கற்பினார் போல் - கற்புடைய மனைவியர் போல; புண்டரிகம் முகம் மலர - (தம்மைப் பிரிந்து சென்ற கதிரவனாகிய தலைவன் தேரிலே வரக் கண்டு பூரித்து) முகங்களாகிய தாமரைகள் மலர; (அதனால்) பூம் பொய்கை - அழகிய பொய்கைகள்; எல்லாம் - யாவும்; அகம் மலர்ந்து பொலிந்தன - உள்ளிடம் செழித்துப் பொலிவுற்றன.
பாசறை: திய வீடு. பாசறையிற் பிரிதல் என்றதால் போர் செய்ய எழுதலாயிற்று. மணித்தேர்: ஒலிக்கும் மணிகள் கட்டிய தேரும் இரத்தினங்கள் பதித்துள்ள தேரும். பொருள் வயிற் பிரிவு: இல்லறம் இனிது நடத்த வேண்டிப் பொருள் ஈட்டற்குக் கலத்திலேனும் காலிலேனும் பிரிதல். பிரிந்து சென்ற தலைவர் தேரிலே திரும்பிவர மகிழ்ந்த கற்புடை மகளிரைக் கதிரவன் தேரிலே வருவதைக் கண்டு முகம் மலர்ந்த தாமரைப் பொய்கைக்கு உவமையாக்கினார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like faithful wives whose husbands, dear as life, wearing fragrant garlands the bees pursue,
- who once named the time of their return and left for the war camp or in search of wealth,
- come back on jewelled chariots, and who, seeing them, rejoice in heart, glow bright, and lose their pallor,
- all the lovely ponds, their lotus faces opening, bloomed within and shone.
What the poem says
At sunrise the lotus ponds open their flowers. They are compared to faithful wives whose husbands had gone away to war or to earn wealth, promising to return at a fixed time. When the men come back on their jewelled chariots as promised, the wives' faces, pale with separation, light up with joy. So the lotuses brighten when their lord the sun returns in his chariot.