கம்பராமாயணம் 703 · பால 10.151

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

விசை - வேகமும்; ஆடல் - வலிமையும், பசும்புரவி - பசுமையுடைய குதிரைகளின்; குரம் - குளம்புகள்; மிதிப்ப - மிதித்தலால்; உதயகிரி - உதயமலையில்; விரிந்த தூளி - பரவிய செந்துகள்; பசையாக - நனையும்படி, மறையவர் கை - வேதியர்கள் கையால்; நறை மலரும் - தேன் நிறைந்த மலர்களும்; நிறை புனலும் - நிறைந்த அர்க்கிய நீரும்; பரந்து பாய - பரவிப் பாய்ந்திட (அப்பசையான செந்தூளியைக் கொண்டு); வெய்யோன் - சூரியன்; திசை ஆளும் - கிழக்குத் திசையை இடமாகக் கொண்ட, மத கரியை - மத யானைக்கு; சிந்துரம் அப்பிய போல் - சிந்தூரத் திலகத்தை அப்பியது போல; அசையாத நெடுவரையின் - சலனமில்லாத அவ் உதய மலையின்; முகடு தொறும் - சிகரங்களில் எல்லாம்; இளங்கதிர் சென்று - இளமையான சூரிய கதிர்கள் சென்று; அளைந்து - படிந்து; சிவந்த - சிவந்த நிறமாய் விளங்கின.

கிழக்கில் உள்ள உயர்ந்த சிகரத்தில் விளங்கும் சூரியக் கதிர்கள், கிழக்குத் திசைக்குரிய யானையின் முகத்தில் தீட்டப்பட்ட சிந்தூரத் திலகம் போன்று இருந்தது - தற்குறிப்பேற்றவணி. காலையந்தி வழிபாட்டில் மறையவர் மந்திரத்தின் மூலம் எடுத்துவிடும் அருக்கிய நீர், அந்த வேளையில் மந்தேகர் என்ற அசுரரால் சூரியனது தேர் தடை செய்யப்படுவதை வச்சிரப் படையாகச் சென்று தடுத்து, அவர்களையும் அழித்து வருகின்றது என்பது நூல் மரபு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the hooves of his swift, strong green horses trampled it, the dust that spread on the Eastern Mountain
  2. turned to paste as the fragrant flowers and brimming water from the hands of the brahmins spread and poured;
  3. and the young rays of the hot one, going and mingling on every peak of that unmoving high mountain,
  4. glowed red, as though vermilion had been smeared on the rutting elephant that rules the quarter.

What the poem says

The sun's green horses kick up red dust on the eastern mountain, and the flowers and water offered to the sun by brahmins at their dawn worship wet it into a paste. With it, the poet imagines, the sun smears the mountain's peaks red, like vermilion daubed on the forehead of the elephant that guards the east.

The commentary adds the tradition that the water offered at dawn becomes a thunderbolt that drives away the Mandeha demons who try to block the sun's chariot.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vicai āṭal pacum puravik kuram mitippa, utayakiri virinta tūḷi
pacai āka. maṟaiyavar kai naṟai malarum niṟai puṉalum parantu pāya,
acaiyāta neṭu varaiyiṉ mukaṭutoṟum iḷaṅ katir ceṉṟu aḷaintu veyyōṉ,
ticai āḷum mata kariyaic cintūram appiyapōl, civanta mātō.