கம்பராமாயணம் 713 · பால 11.4

Section பால காண்டம் / 11. குலமுறை கிளத்து படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரைசன் - அந்தக் ககுத்த மன்னனது; அவன் பின்னோரை - குலத்தில் பின்பு தோன்றிய அரசர்களை; அளப்பு - (இத்தன்மையுடையவர் என்று) அளவிட்டுச் சொல்லுதல்; என்னாலும் அரிது - என்னாலும் முடியாது; நரை - முடி வெளுத்தலும்; திரை - உடம்பின் தோல் சுருங்குதலும்; மூப்பு - (இவற்றிற்குக் காரணமான) முதுமைத் தன்மையும்; இவை - என்னும் இவற்றை, மாற்றி - நீக்கி; இந்திரனும் - தேவேந்திரனும்; (மற்ற தேவர்களும்); நந்தாமல் - சாகாதபடி; குரைகடலை - ஒலிக்கின்ற பாற்கடலை; நெடுவரையால் - பெரிய (மந்தர) மலையால்; கடைந்து - கடைந்து; அமுது கொடுத்தானும் - (அதிலிருந்து) தேவர்களுக்கு அமுதத்தை எடுத்துக் கொடுத்தவனும்; உரை குறுக - (மொழியில்) சொற்கள் குறையும்படி, நிமிர் கீர்த்தி - மிகுதியான புகழையுடைய; இவர்குலத்தோன் - இந்த மைந்தர்களது குலத்தில் உதித்த; ஒருவன் காண் - ஓர் அரசனே ஆவான்.

உரை குறுக நிமிர்கீர்த்தி - இக் குமாரர்களின் பெரும்புகழ் சொல்லுக்கு அடங்காது. அதாவது இவர்களின் புகழைக் கூறுவதற்கு வேண்டிய சொற்கள் உலகிலே இல்லை என்பது. இந்திரனும் - எச்சவும்மை, உயர்வு சிறப்பும்மை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'King, his descendants cannot be measured by me in any way.
  2. Know that one of this line, whose fame towers beyond what words can hold,
  3. is he who, to banish grey hair, wrinkles and old age and keep even Indra from perishing,
  4. churned the roaring sea with the tall mountain and gave the nectar.'

What the poem says

Vicuvāmittiraṉ confesses that he cannot even begin to list Kakutstha's descendants, whose fame is too great for words. He gives one example: a king of this line who churned the ocean of milk with Mount Mantara and gave the gods the nectar that frees them from grey hair, wrinkles, old age and death. In this telling, the churning is credited to a Solar king.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'araca! avaṉ piṉṉōrai eṉṉāṉum aḷappu aritāl:
urai kuṟuka nimir kīrtti ivar kulattōṉ oruvaṉkāṇ,
narai tirai mūppu ivai māṟṟi, intiraṉum nantāmal,
kurai kaṭalai neṭu varaiyāl kaṭaintu amutu koṭuttāṉum.'