கம்பராமாயணம் 714 · பால 11.5

Section பால காண்டம் / 11. குலமுறை கிளத்து படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பொருது உறை - போர்புரிந்த பின் உறையில்; சேர் வேலினாய் - செருகிய வேற்படையை உடைய சனகனே!; சுடர்நேமி செல - ஒளியுடைய தமது ஆணைச் சக்கரம் (எங்கும் தடையில்லாமல்) செல்லுமாறு; திரிபுவனம் - மூன்று உலகங்களையும்; முழுது ஆண்டு நின்றோர் - முழுவதும் ஆட்சி புரிந்தவர்களும், கருதல் அரும்பெரும் - நினைக்கவும் முடியாத (இரக்கம் முதலிய) சிறந்த; குணத்தோர் - குணங்களையுடையவர்களும் ஆகிய; இவர் முதலோர் - இக் குமாரர்களின் குலத்திலே தோன்றிய முந்தைய அரசர்கள்; கணக்கு இறந்தோர் - எண்ணற்றவர்கள்; (இவர் குலத்துள்) ஒருவன்; புலிப்போத்தும் - (இயல்பாகவே பகைமையுடைய) ஆண்புலிகளும்; புல்வாயும் - மான்களும்; ஒருதுறையில் - (அப் பகையுணர்ச்சியின்றி) ஒரே நீர்த்துறையிலே; நீர் உண்ண - (இறங்கித்) தண்ணீர் குடிக்கும்படி; உலகு ஆண்டோன் - உலகத்தை அரசாண்டவன்; ஒருவன் உளன் - (மாந்தாதா) இருந்தான்.

அரசனது ஆணையிடத்துத் தமக்குள்ள அச்சத்தால் எவையும் நலியத்தக்கனவும் நலியாமல் உள்ள நீதிமுறை கூறியது. இந்த அரசன் மாந்தாதா என்பவன். அவன் அரசாண்ட காலத்தில் நாடெங்கும் சத்துவ குணம் நிலவியிருந்ததால் மிருகங்கள் முதலியனவும் அன்பும் அருளும் பூண்டு வாழ்ந்தன. புல் வாய் - புல்லையுண்ணும் வாயையுடைய (மான்) - காரணப்பெயர் வேற்றுமைத் தொகையன்மொழி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Those of unimaginable great virtue, their forebears, are past counting,
  2. who ruled all three worlds and stood while their bright wheel rolled on;
  3. O you whose spear rests in its sheath after battle! There was one
  4. who ruled the world so that the tiger and the deer drank water at the same ford.'

What the poem says

The ancestors of these princes are countless, each a ruler of the three worlds whose wheel of command rolled everywhere unopposed. One of them, Māndhātā, governed so justly that even natural enemies lived at peace: tigers and deer drank side by side at the same pool, all creatures being filled with gentleness during his reign.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'karutal arum peruṅ kuṇattōr, ivar mutalōr kaṇakku iṟantōr,
tiri puvaṉam muḻutu āṇṭu cuṭar nēmi cela niṉṟōr,
porutu uṟai cēr vēliṉāy! pulip pōttum pulvāyum
oru tuṟaiyil nīr uṇṇa ulaku āṇṭōṉ uḷaṉ oruvaṉ.'