கம்பராமாயணம் 715 · பால 11.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விறல் மன்னர் - வெற்றியையுடைய அரசர்கள்; தொழு கழலாய் - பலரும் வணங்குகிற அடிகளை யுடையவனே; பொறை மன்னு - பொறுமை மிக்க; வானவரும் - தேவர்களும்; தானவரும் - (பொறுமையற்ற) அரக்கர்களும்; பொரும் - (முன்பு ஒருவரோடு ஒருவர்) போர்செய்த; ஒரு நாள் - ஒரு காலத்தில்; இவர் குலத்தோன் - இந்த மைந்தர்களது குலத்தைச் சேர்ந்தவனான ஓர் அரசன்; மறை மன்னு - வேத விதிப்படி, (முடிசூட்டப்பெற்ற); மணிமுடியும் - பொருந்திய நவரத்தின முடியும்; ஆரமும் - மாலைகளும்; வாளொடு மின்ன - ஒளியோடு மின்னுமாறு; வில் பிடித்த - கையில் வில்லேந்திய; அறம் என்ன - தருமதேவதை போல; ஒரு தனியே திரிந்து - தான் ஒருவனாகவே (வாளும் கையுமாக வான் உலகு சென்று) சஞ்சரித்து; அமராபதி காத்தோன் - (இந்திரனது) அமராவதி நகரத்தைக் காத்து நின்றான் (முசுகுந்தன்).
முசுகுந்தன்: வானுலகில் அசுரர்கள் தேவர்களோடு போர் செய்து அவர்களைத் துரத்தினர்; இந்திரன் முதலான தேவர்கள் இந்த அரசனை அடைந்து உதவ வேண்டினர். அதனைக் கேட்ட மன்னவன் வான் சென்று அசுரர்களைக் கொன்று முருகன் சேனைத்தலைவனாக வருகின்ற வரையிலும் வானுலகைக் காத்திருந்தான். வில்பிடித்த அறம் - இல் பொருள் உவமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'With his Veda-blessed jewelled crown and his necklaces flashing with his sword,
- one day, when the patient gods and the demons were at war,
- O you whose feet victorious kings adore, one of this line, like Dharma holding a bow,
- roamed alone and guarded Amarāvatī.'
What the poem says
During a war between the gods and the demons, the gods were driven from heaven and appealed to a king of this line, Mucukunda. He went to heaven alone, his crown, jewels and sword flashing, and like Righteousness itself armed with a bow, he killed the demons and guarded Indra's city Amarāvatī until Murukaṉ came to lead the divine army.
"Dharma holding a bow" is a comparison with something that does not exist in nature, a recognised figure in Tamil poetics.