கம்பராமாயணம் 716 · பால 11.7

Section பால காண்டம் / 11. குலமுறை கிளத்து படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இன் உயிர்க்கும் இன் உயிராய் இரு நிலம் காத்தார்' என்று,
பொன் உயிர்க்கும் கழல் வரை ஆம் போலும் புகழ்கிற்பாம் !
மின் உயிர்க்கும் நெடு வேலாய் ! இவர் குலத்தோன் மென் புறவின்
மன் உயிர்க்கும் தன் உயிரை மாறாக வழங்கினனால்.'

பொருள் · Meaning in Tamil

மின் உயிர்க்கும் - மின்னல்போல் ஒளி விடுகின்ற; நெடுவேலாய் - நீண்ட வேல் தாங்கிய சனகனே; பொன் உயிர்க்கும் கழலவரை - விளங்கும் வீரக் கழலைப் பூண்ட இக்குலத்து மன்னர்களை; இன் உயிர்க்கும் - (உலகிலுள்ள) இனிமையான உயிர்கள் எல்லாவற்றிற்கும், இன் உயிராய் - தாம் இனிய உயிர் ஆக இருந்து; இரு நிலம் காத்தார் - பெரிய நிலவுலகை அரசாண்டார்கள்; என்று - என்று சொல்லி; புகழ்கிற்பாம் - புகழவல்லோம்; யாம் போலும் - நாம்தான் போலும்! (புகழ் நம்மால் முடியாது; ஏனெனில்); இவர்குலத்தோன் - இக் குமாரர்களின் குலத்தில் தோன்றிய அரசன் ஒருவன்; மென் பறவை - மெல்லியபறவை ஒன்றின்; மன் உயிர்க்கு - நிலைபெற்ற உயிர்க்கு; மாறாக - ஈடாக; தன் உயிரை - தனது ஆருயிரை; வழங்கினன் - கொடுத்தான்.

இங்குக் கூறப் பெற்றவன் சிபி மன்னவன். இவன் நூறு அசுவ மேதயாகம் புரிந்து நான்காம் மனுவந்தரத்தில் இந்திரனாக அமர்ந்திருந்தவன். போலும் - ஒப்பில் போலி - எதிர்மறைப் பொருள் தந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Can we praise those whose anklets shine with gold
  2. by saying, "They guarded the wide earth as the dear life of every dear life"?
  3. O you of the long spear that flashes lightning! One of this line
  4. gave his own life in exchange for the life of a soft dove.'

What the poem says

Vicuvāmittiraṉ asks how anyone could adequately praise these kings by merely saying that they cherished their subjects as their own lives. One of them, Śibi, gave his own life to save a dove. In the well-known story, a dove fleeing a hawk took refuge with Śibi, and he offered his own flesh — his life — in its place.

The commentary adds that Śibi later served as Indra in the fourth age of Maṉu after performing a hundred horse sacrifices.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iṉ uyirkkum iṉ uyirāy iru nilam kāttār' eṉṟu,
poṉ uyirkkum kaḻalvarai yām pōlum pukaḻkiṟpām!
miṉ uyirkkum neṭu vēlāy! ivar kulattōṉ meṉ puṟaviṉ
maṉ uyirkkum taṉ uyirai māṟāka vaḻaṅkiṉaṉāl.'