கம்பராமாயணம் 7307 · யுத்த 14.249

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 ‘

பொருள் · Meaning in Tamil

இறங்கு கண்ணினன் தலையன் - (மணிமுடியோடு செருக்கனைத்தும் இழந்ததனால்) கீழ்நோக்கிய பார்வையினையும் தலையினையும் உடையவனும்; எல் அழி முகத்தினன் - ஒளியிழந்த முகத்தினையுடையவனும்; வெறுங்கை நாற்றினன் - (கருவிகள் இழந்த) கைகளைத் தொங்க விட்டவனும்; விழுதுடை ஆல் அன்ன மெய்யன் - (அதனால்) விழுது தொங்குகின்ற ஆலமரம் போன்ற மேனியினையுடையவனுமான இராவணன்; 'அறம் கடந்தவர் செயல் இது' என்று உலகு எலாம் ஆர்ப்ப - அறத்தினை மீறிய தீயோர்களின் செயல்கள் இப்படித்தான் முடியும் என்று உலகில் உள்ளோர் எல்லோரும் ஆரவாரமிட்டுக்கூற; நிறம் கரிந்திட - தன் நிறம் (பொலிவிழந்து) கரிந்து போக; விரல் நிலம் கிளைத்திட நின்றான் - கால் விரல்களால் நிலத்தைக் கிளறிய வண்ணம் நின்றான்.

தோற்று நாணி நிற்கும் ஒரு பெருவீரனின் தோற்றத்தை அவ்வந்நிலைகட்கேற்ற மெய்ப்பாடுகளுடன் இப்பாடல் காட்டுகிறது. பத்து முகங்களிலும் ஒளி இழந்ததால் 'எல் அழி முகத்தினன்' என்றும் ஆயுதங்கள் இழந்ததால் வெறுங்கை நாற்றினன்' என்றும் உரைத்தார் ஆயுதமின்றிக் கைகள் இருபதும் தொங்கிக் கிடக்கும் தோற்றம் 'விழுதுடை ஆல் அன்ன மெய்யன்' ஆயிற்று. அறங்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாருள் பேதையார் இல் (குறள். 142) என்பது அறநூல் கூற்றாதலின் முன்னர் இதனைக் கூற அஞ்சிய உலகம் இப்போது துணிந்து கூறியதால், 'அறங்கடந்தவன் செயல் இது' என்று உலகெலாம் ஆர்ப்ப என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While the whole world shouted, 'This is what comes to those who transgress dharma,'
  2. his colour scorched, his toes scratching at the ground, he stood,
  3. eyes cast down, face robbed of its light, head hung low,
  4. his empty hands dangling, his body like a banyan hung with aerial roots.

What the poem says

Irāvaṇaṉ stands humiliated. The world, which had been afraid to say it before, now cries aloud that this is the end of those who break the moral law. He stands with downcast eyes and bowed head, his ten faces dull, scratching the earth with his toes in shame. His twenty empty arms hang down like the aerial roots of a banyan tree.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘aṟam kaṭantavar ceyal itu ‘ eṉṟu, ulaku elām ārppa,
niṟam karintiṭa, nilam viral kiḷaittiṭa, niṉṟāṉ
iṟaṅku kaṇṇiṉaṉ, el aḻi mukattiṉaṉ, talaiyaṉ,
veṟuṅ kai nāṟṟiṉaṉ, viḻutuṭai āl aṉṉa meyyaṉ