கம்பராமாயணம் 7358 · யுத்த 15.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உறங்குகின்ற கும்பகன்ன - உறங்குகின்ற கும்பகர்ணனே; உங்கள் - உங்களுடைய; மாய வாழ்வு எலாம் - பொய்யான வாழ்வு எல்லாம்; இன்று இறங்குகின்றது - இன்றில் இருந்து இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது; எழுந்திராய் எழுந்திராய் - அதனைக் காண்பதற்காக எழுந்திருப்பாய் எழுந்திருப்பாய்; கறங்கு போல - காற்றாடி போல் எல்லா இடத்திலும் திரிகின்ற; வில்பிடித்த - வில்லைப் பிடித்த; காலதூதர் - காலனுக்குத் தூதரானவர்; கையிலே இனிக் கிடந்து - கையில் இனிப் படுத்து; உறங்குவாய் உறங்குவாய் - தூங்குவாயாக.
இப்பாடலில் வெகுளிக்குரிய வலிய சந்தம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. அடுக்கு சந்தம் தழுவி வந்தது. எலாம் - இடைக்குறை. காலதூதர்-நான்காம் வேற்றுமைத் தொகை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Sleeping Kumpakaṉṉa! All your false, fleeting life
- is going down today, see it; get up! get up!
- In the hands of Death's messengers, who wield the bow and whirl about like a pinwheel,
- sleep, sleep! From now on lie there and sleep!'
What the poem says
The messengers' famous wake-up call to Kumpakaruṇaṉ (Kumpakaṉṉaṉ). Their glorious but illusory life is collapsing today, so let him get up; otherwise he may as well sleep on for good in the hands of Death's messengers, the archers spinning about the battlefield like whirligigs, meaning Irāmaṉ and his followers. The poet uses a pounding, repetitive rhythm suited to their anger.