கம்பராமாயணம் 7357 · யுத்த 15.44

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கிங்கரர் - பணியாளர்; நால்வர் சென்று - நால்வர் போய்; அக்கிரி அனான் - மலையை ஒத்தவனான கும்பகருணன்; கிடந்த கோயில் - படுத்துறங்கும் அரண்மனையின்; மங்குல் தோய்- மேகம் படிந்துள்ள; வாயில் சார்ந்து - வாயிலை அடைந்து; மன்ன - அரசனே; நீ உணர்தி என்ன - நீதுயில் விட்டு எழுதி என்று சொல்லி; தம் கையின் எழுவினாலே - தங்கள் கையில் உள்ள இரும்புத் தூண்களால்; தலை செவி தாக்க - தலையிலும் செவியிலும் தாக்க; பின்னும் - அவ்வாறு செய்த பின்னும்; வெங்கணான் துயில்கின்றானை - கொடிய கண்களையுடைய தூங்குகின்ற கும்பகருணனைப் பார்த்து; வெகுளியால் - சினத்தினால்; இனைய சொன்னார்- இச்சொற்களைச் சொல்லலானார்.

கும்பகர்ணனை இவ்வாறு அன்றி வேறு வகையில் எழுப்பலாகாமை உணர்ந்தவர் ஆதலின், 'எழுவினால் தலைசெவி தாக்க என்றார் இராவணன் தோற்றதை உணர்ந்தபின் எழுப்புகின்றனர். ஆதலின் வெகுளியால் சொல்லும் பின்வரும் சொற்களும் இயல்பானதே என்று உய்த்துணரலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The four servants went, and reaching the cloud-touching gate
  2. of the palace where that mountain of a man lay, cried, 'King, wake up!'
  3. and struck him on the head and ears with the iron bars in their hands; and still
  4. the fierce-eyed one slept on, so in their anger they said these words.

What the poem says

Kumpakaruṇaṉ, cursed to sleep for months at a time, cannot be woken by ordinary means. The four messengers shout at him and pound his head and ears with iron bars, but he sleeps on. Knowing that Irāvaṇaṉ has been defeated, they lose their temper and shout the words of the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kiṅkarar nālvar ceṉṟu, ak kiri aṉāṉ kiṭanta kōyil
maṅkul tōy vāyil cārntu, ‘maṉṉa nī uṇarti ‘eṉṉa,
tam kaiyiṉ eḻuviṉālē talai cevi tākki, piṉṉum
veṅkaṇāṉ tuyilkiṉṟāṉai vekuḷiyāl iṉaiya coṉṉār.