கம்பராமாயணம் 7356 · யுத்த 15.43
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நன்று இது கருமம் என்னா - கும்பகருணனைப் போருக்கு அனுப்பும் இச்செயல் செயத் தக்கதே என்று சொல்லி; நம்பியை நணுக ஓடிச் சென்று இவண் தருதிர் என்றான் - (தூதரை அழைத்த இராவணன் அவர்களிடம்) நீங்கள் ஓடிப்போய் ஆடவர் திலகனாய கும்பகருணனை இங்கே அழைத்து வாருங்கள் என்றான்; என்றலும் - என்று இராவணன் கூறிய அளவிலே; தென்திசைக் கிழவன் தூதர் - தெற்குத்திசைத் தலைவனாகிய இயமனது தூதர்; தேடினர் திரிவர் என்ன - தேடித்திரிவது போல; நால்வர் சென்றார் - நான்கு பேர் சென்றார்கள்; குன்றினும் உயர்ந்த தோளான் - அவர்கள் குன்றைக் காட்டிலும் உயர்ந்த தோள்களை உடைய கும்பகருணனது; கொற்ற மாக்கோயில் புக்கார் - வெற்றி பொருந்திய பெரிய அரண்மனைக்குள் சென்று புகுந்தார்கள்.
இறுதிக்காலத்து நால்வர் தூக்கச் செல்லல் மரபு என்ற குறிப்பைக் காட்டியது போல் நால்வர் சென்றார் என்றது நயம். தேடினர் - முற்றெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'This is the thing to do,' he said; 'run to my brother,
- go and bring him here'; at these words four of them went,
- like the messengers of the Lord of the South roaming about in their search,
- and entered the great, victorious palace of him whose shoulders rose higher than hills.
What the poem says
Irāvaṇaṉ orders his brother Kumpakaruṇaṉ to be fetched. Four messengers hurry off, like the messengers of Yama, Lord of the South and of death, searching out a victim. The commentary notes the grim hint in the number four: it takes four men to carry a body to the pyre.